Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு இந்த தீபாவளியில் தங்கம், வெள்ளியை வாங்கும் யோகம்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்பு ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் ரிஷபம் ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

தீபாவளி பலன்கள்
ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் ரிஷர ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு 1, 6க்கு உரியவன் நீசமாக இருக்கிறார். 6க்கு உடையவர் நீசமாக இருப்பதால் அற்புமான காலகட்டம் தான். நிறைய ரிஷப ராசினருக்கு மனைவியே எதிரியாகக் கூட இருப்பார்கள். 6க்கு உரியவர் ரண, ருண, ரோக, சத்ரு ஸ்தானதிபதி. வியாதி கடன் கஷ்டத்தை தரக்கூடியவர். 6க்கு உடையவர் நீசமாகும்போது வியாதி, கடன், கஷ்டம் இல்லாமல் போகும்.
இனம்புரியாத கவலை
ராசிநாதனாக இருந்து நீசமாவதால் மனதிற்குள் போராட்டம், குழப்பம், இனம்புரியாமல் ஒருவிதமாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும். உடம்பில் ஆரோக்கிய குறைபாடால் சோம்பலாக இருக்கிறோமோ, அல்லது மனதளவில் ஏதாவது பிரச்சனையா என்று தெரியாத வகையில் ஒரு சோக உணர்வில் இருப்பீர்கள். 4க்கு உடைய சூரியன் நீசமாகிறார். சூரியன், செவ்வாய், புதன் ஆகியோர் 6 இல் மறைகின்றனர்.
கவனம்
வண்டி, வாகன யோகங்கள் போன்றவற்றை வாங்குவதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. 4க்கு உரியவர் நீசமாகும்போது புதிய வண்டி, வாகனங்கள் வாங்கும் சுபமங்கள யோகம் இருக்காது. அதனால், அதனை திட்டமிடாமல் இருப்பது நல்லது. அம்மாவுடைய உடல்நலனில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய மதிப்பு, மரியாதை, கெளரவம் போன்ற விஷயத்தில் கவனம் தேவை.
பெயர் புகழ் கெடும் வாய்ப்பு
நம்முடைய பெயர், புகழ் கெடும் வகையில் மற்றவர்கள் புறம் பேசுவதற்கான வாய்ப்புள்ளது. தீபாவளியையொட்டி உங்களுக்கு பெரிய யோகமும் நடக்காது. ராசிநாதனும் நீசம், புதன், செவ்வாய் 6 இல் மறைகின்றனர், சூரியன் நீசமாகிறார் என்பதனால் சாதாரணமான காலகட்டமாகத்தான் இருக்கும். ஆடம்பர உடைகள் வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். உடைகள் கிழிவது, எரிவது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
புதிய பொருள்கள் வாங்காமல் இருப்பது நல்லது. குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஆனால் இப்போது தள்ளிப் போவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாட்டு விஷயங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு அதில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தங்கம் வாங்குவதற்கான யோகமான காலகட்டமாக இருக்கும். தங்கம், வெள்ளிகளை வாங்கிக் குவிக்கும் யோகம் உண்டு.












Click it and Unblock the Notifications