Diwali Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் தனுசு ராசி.. கோடியில் புரளும் யோகம்.. என்ஜாய்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் தனுசு ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

தீபாவளி பலன்கள்
ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் தனுசு ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு ராசிநாதன் குரு பகவான். 1, 4க்கு உரியவர் உச்சம் பெறுகிறார். 18 ஆம் தேதியே குரு பகவான் அதிசாரமாகப் பெயர்ச்சி அடைந்து கடகத்திற்கு வருகிறார். கடகத்திற்கு வந்த குரு பகவான் உச்சமடைந்து 5, 7, 9ஐ பார்க்கிறார். மிக பிரம்மாண்ட அமைப்புகள் ஏற்படும். 5 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் யோகங்கள் வந்து சேரும்.
லட்சியம் நிறைவேறும்
யோகாதிபதியை குரு 5 ஆம் பார்வையாக பார்ப்பதால் யோகம் அதிகளவில் கிடைக்கும். உங்களுக்கு வேண்டிய யோகங்கள் அனைத்தையும் குரு பகவான் கொடுப்பார். தீபாவளியன்று நீண்ட நாள் லட்சியம் நிறைவேறும். குரு கடகத்தில் உச்சம் பெறுகிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு 12 ஆம் இடமான இல்வாழ்க்கை, சுகத்தை குரு பகவான் பார்க்கிறார்.
வெளிநாடு யோகம்
வெளிநாடு செல்லும் யோகம், சுற்றுலா செல்லும் யோகம் உண்டாகும். 12 ஐ பார்க்கும் குரு பகவான் 9 ஆம் பார்வையாக 2 ஆம் இடத்தைப் பார்க்கிறார். பணம் பல வழிகளில் உங்களுக்கு வந்து சேரும். கூடுதல் தொழில் செய்து அதன் மூலம் வருமானம் வரும் வாய்ப்பு ஏற்படும். கூடுதல் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
புதிய தொழில்
2 ஆம் இடத்தை குரு பார்க்கும்போது புதிய தொழில் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பணம் முக்கியமில்லை என்கிற எண்ணம் மாறி பணத்தைப் பற்றிய தெளிவுகள் ஏற்படும். புத்திசாலித்தனமாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். 4 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் உயர்கல்வி, உயர் பதவி, மதிப்பு, மரியாதை, பதவி உயர்வு போன்றவற்றை குரு பார்ப்பதால் பதவி உயர்வு கிடைக்கும்.
முன்னேற்றம்
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பம், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வீடு, மனை, மாடு, கார் வாங்கும் யோகம் உண்டாகும். குருவின் பார்வையால் அதிர்ஷ்டத்தை அள்ளும் காலகட்டமாக இருக்கும். 12 ஆம் இடத்தில் ஆட்சி பெறும் செவ்வாயை குரு பார்ப்பதால் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். அதிர்ஷ்டங்கள் பெறும் காலகட்டமாக இருக்கும்.
யோகம்
உங்களுடை இயல்பே மாறக்கூடிய நேரமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். இலக்கை நிர்ணயித்து இனி சம்பாதிக்கத் தொடங்குவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் அற்புதமான காலகட்டம். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் தகர்த்தெறியும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications