குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: மேஷ ராசிக்கு குழந்தை பாக்கியம் முதல் தொழில், பணவரவு வரை அமோக பலன்கள்

Subscribe to Oneindia Tamil

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

Guru Peyarchi Mesham Rasi palan

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில்
குரு அதிசாரப் பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன்

மேஷ ராசியினருக்கு இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிகிச்சை பெறுவோருக்கும் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக அமையும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் குரு சிம்ம ராசிக்கு வருவதால் மேஷ ராசிக்கு குரு பார்வை கிடைக்கப் போகிறது. உங்களுக்கு நடக்க வேண்டிய கெடுதல்களில் இருந்து குரு பகவான் பாதுகாக்கப் போகிறார்.

பிரச்சனை தீரும்

பதவி எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். அப்பாவுடன் நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படும். ஆண்களுக்கு நிகராக வேலைகளைச் செய்யக் கூடியவர்கள் மேஷ ராசி பெண்கள். தற்போது 5 ஆம் இடத்துக்கு குரு வருவதால் ஹார்மோன் பிரச்சனை, மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றிற்கு உரிய மருத்தும் கிடைக்கும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்து மீண்டு வருவீர்கள். ஆரோக்கியம் அற்புதமாக மேம்படும். பெண்களுக்கு குழந்தை இல்லை என்கிற பெயரால் மன சங்கடத்தில் இருந்து வந்த நிலைமைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். நிறைய பெண்கள் இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியில் தொழில் முனைவோராவதற்கான யோகம் பெறுவீர்கள்.

வெளிநாடு யோகம்

சிறு, குறு தொழில்களில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். அரசின் அனுகூலம் கிடைக்கும். அரசிடம் இருந்து மானியம் வாங்கும் அமைப்பு உள்ளது. வேலையில் இடமாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு வந்து சேரும்.

தொழில்

ஏற்றுமதி தொடர்பான தொழில்களில் ஏற்றம் பெறுவீர்கள். உணவுத் துறையில் பெரிதாக சாதிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. ரெஸ்டாரன்ட், உணவுத் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு வெற்றி ஏற்படும். நீண்ட நாள் திருமணமாகாமல் காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டு. உங்களுடைய ஆசைகள், கனவுகள் எல்லாம் நிறைவேறும் அமைப்பு.

அனுகூலம்

காதல் திருமணங்களுக்கான யோகம் உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு விரிவுபடுத்தக்கூடிய அமைப்பு உள்ளது. வராமல் இருந்து வந்த பணங்கள் கைக்கு வந்து சேரும். சொத்துக்கள் விற்க முடியாமல் இருப்பவர்களுக்கு சொத்துக்களை விற்கும் யோகம் உண்டாகும். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் சாதகம் ஏற்படும்.

வழிபாடு

செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது சகலவித நன்மைகளையும் தரும். சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்களை முருகருக்கு சாற்றி வழிபடுவது நல்லது. பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி குடித்து வருவது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது மேன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+