குரு அதிசார பெயர்ச்சியில் சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இதை மட்டும் செய்ய மறந்துடாதீங்க

Subscribe to Oneindia Tamil

குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், கன்னி, சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்படும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

guru-adhisara-peyarchi-what-kind-of-benefits-will-kanni-rasi-people-get-during-this-period

துலாம் ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். கன்னி ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசியினருக்கு திவ்ய தேசங்கள், பாடல் பெற்ற தலங்களுக்குச் சென்று வருவது நன்மை பயக்கும். குரு கேது சேரும்போது ஆன்மீக பயணம் செய்வது நிறைய மாற்றத்தைத் தரும். அதேபோல, குழந்தைகளின் கல்விக்கான செலவுகளைச் செய்வது பாக்கியத்தைக் கொடுக்கும். இடுப்பு, கால் பாதம், இதயம் சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இரவில் தூக்கமின்மை ஏற்படும்.

ஆன்மீக சுற்றுலா

சுப விரயம் செய்வது, ஆன்மீக சுற்றுலா செல்வது நன்மையைத் தரும். பூனே, மஹாராஷ்டிராவில் உள்ள 8 விநாயகர் கோயில்களுக்குச் செல்வது, நரசிம்மர் கோயில்களுக்குச் செல்வது பெரிய மாற்றத்தைத் தரும். குரு அதிசாரமாக விரயத்துக்கு குரு வரப்போகிறார். நல்ல காரியங்களுக்கு செலவு செய்யாவிட்டால் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பெற்றோர் கோவிலுக்குச் செல்வதற்கு பணம் கொடுப்பது நன்மையைத் தரும்.

சொந்த வீடு யோகம்

சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் ஏற்படும். ராமர் கோயில் அருகில், நெடுஞ்சாலை அருகில் வீடு அமையும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. அப்பா, தாத்தாவின் சொத்துக்கள் வந்து சேரும். 6 ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பது கேது பார்வையாக இருப்பதால் வம்பு, வழக்கு எது இருந்தாலும் அவை பரிபூரணமாக நீங்கும்.

வேலைவாய்ப்பு

வேலை இல்லாத ஆட்களுக்கு வேலை கிடைக்கும் யோகம் ஏற்படும். அஷ்டம ஸ்தானத்துக்கு குரு பார்வை இருப்பதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. மனைவியின் மூலமாக வருமானம் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பயணம், எதிர்பாராத பரிசுப் பொருள்கள், சுற்றுலாக்கள் போன்றவை அமையும். காவல் துறை, வழக்கு சார்ந்த விஷயங்களில் நன்மைகள் கிடைக்கும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு சென்று செட்டிலாகும் அமைப்பு உள்ளது. ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆசிய நாடுகளில் செட்டிலாகும் அமைப்பு உள்ளது. குடும்பம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சிகிச்சையுடன் கூடிய குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரவு நேரத்தில் மேற்கொள்ளும் பயணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

கவனம்

இரவு நேரத்தில் மற்றவர்களுடன் பேசுவது, உறவு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பண வரவு நன்றாக இருக்கும். திருமணம் தாமதமாவதற்கான வாய்ப்புள்ளது. புதிய வேலை கிடைக்கும். காதலில் பிரிவு, மனக் கசப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+