Guru Peyarchi 2026: மிதுன ராசிக்கு குருப்பெயர்ச்சியில் வரும் அதிர்ஷ்டம்..பணவரவு இரட்டிப்பாகும் யோகம்
Guru Peyarchi 2026: ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் குரு பகவானின் பெயர்ச்சியானது இந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஜூன் மாதம் 2 ஆம் தேதி இந்த வருடத்திற்கான குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறையும், குருப்பெயர்ச்சி 12 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. வருடாந்திர கிரகங்களான சனி, ராகுகேது, குரு ஆகிய 3 கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஜூன் மாதம் 2 ஆம் தேதி கடக வீட்டில் உச்ச குருவாக அமரும் குரு பகவான் மூன்று மாதம் கழித்து சிம்ம வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மூன்று மாதம் இருந்துவிட்டு மீண்டும் கடகத்துக்கு வருகிறார். அதிசார குருப்பெயர்ச்சியாக இருந்தாலும் முதலில் உச்சம், பிறகு நட்பான நிலை என்கிற வகையில் இந்த குரு பகவான் பெரும்பாலும் நன்மைகளைத் தருவார்.
இந்த குருப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப்போகும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுனம் ராசியினருக்கு ராசியிலேயே குரு பகவான் 2 ஆம் இடத்தில் உச்சமடைகிறார். பண வரவு நன்றாக இருக்கும். நன்றாக சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு, கேது 2 ஆம் இடத்தில் சேரும்போது 8 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவையும், 10 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சனியையும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு உச்ச குரு பார்ப்பது மிகப்பெரிய மேன்மையை ஏற்படுத்தும்.
திடீர் அதிர்ஷ்டம்
எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். உங்களை விட்டுப் போன பணம், ஏமாந்து போன பணம், இழந்த பணத்தை மீட்டெடுக்கும் யோகம் உண்டு. 2020 முதலே நிறைய பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
பணவரவு
பண வரவு நன்றாக இருக்கும். வருமானம் உயரும். கணவன் ஓரிடம், மனைவி ஓரிடம், குடும்பம் ஓரிடம், பிள்ளைகள் என்ற நிலைமைகள் எல்லாம் தீரும். குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேரக்கூடிய அமைப்பு ஏற்படும். மனைவிக்கு, கணவருக்கு இடமாற்றம் கிடைக்கும். ஓரிடத்தில் சேர்ந்திருக்கும் யோகம் உண்டு. காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு புதிய காதல் வரக்கூடும்.
வருமானம்
காதல் அமைப்பு நன்றாக இருக்கும். பிரபலமடைய வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கு பிரபலமடையும் யோகம் உண்டாகும். பணம் சம்பாதிக்கக் கூடிய அமைப்பு ஏற்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். ஒரே இடத்தில் 5, 10 வருடம் இருந்தவர்களுக்கு நல்ல மாற்றம், சம்பள உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பண வரவு, பொருளாதார உயர்வு ஏற்படும்.
நல்ல கடன்கள்
சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம், லாபங்கள் ஏற்படும். 6, 8, 10 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் புதிய கடன்கள் கிடைக்கும். தொழில் முனைவோருக்கு நல்ல கடன்கள் கிடைக்கும். 6 ஆம் இடத்தை உச்சகுரு பார்க்கும்போது நல்ல கடன்கள் கிடைக்கும். அதன் மூலம் நல்ல லாபம், வருமானம் கிடைக்கும் அமைப்பு ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் உண்டாகும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.
-
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications