குரு பெயர்ச்சி 2021: மேஷத்திற்கு அள்ளித்தரப்போகும் லாப குரு - மகர ராசிக்கு குடும்பத்தில் குதூகலம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லாப குருவும் மகர ராசிக்காரர்களுக்கு குடும்ப குருவும் குதூகலத்தைத் தரப்போகின்றனர். குரு சஞ்சரிக்கும் இடத்தைப் பொறுத்தும் பார்வையைப் பொறுத்தும் மேஷம், மகர ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப
சென்னை: மகர ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் இன்னும் ஒரு மாதத்தில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் லாபத்தையும், அதிக பண வரவையும் அடையப்போவது மேஷம், மகர ராசிக்காரர்கள். மேஷ ராசிக்கு 11ஆவது வீட்டில் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம குரு இனி குடும்ப குருவாக இரண்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இந்த குருவின் பார்வையும் சாதகமான வீடுகளில் விழுவதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் அடையப்போகும் நன்மைகளைப் பார்க்கலாம்.
திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் மங்களகரமான பிலவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். காலச்சக்கரத்திற்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு அமரப்போகிறார். குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழப்போகிறது. குரு பார்வை பட்டாலே நம்முடைய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கிவிடும். களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கி திருமணம் கை கூடி வரும். நிதி நெருக்கடிகள் நீங்கி பண வரவு அதிகரிக்கும். அதிகம் பணம் புழக்கம் உள்ள இடத்தில் வேலை கிடைக்கும்.
இந்த குரு பெயர்ச்சியால் குரு பலம் கிடைக்கப் போகும் ராசிக்காரர்களுக்கு திருமணம் கை கூடி வரும் குரு பார்வை கிடைக்கும் ராசிக்காரர்களின் தோஷங்கள் நீங்கி அந்தஸ்து உயரப்போகிறது. இது கோச்சார ரீதியான பலன்தான். உங்களின் சுய ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரம் தசாபுத்தியைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். குரு பகவான் சுப கிரகம் 2022ஆம் ஆண்டு வரை கும்ப ராசியில் பயணம் செய்தாலும் அதிசாரமாக சில மாதங்கள் மீன ராசிக்கும் பயணம் செய்வார்.

லாப குருவினால் பண வரவு
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் குருபகவான் பயணம் செய்யப்போகிறார். குருவின் பயணம் பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் இருக்கும் காலத்தில் வேலையில் பிரச்சினைகள் சிக்கல்களை சந்தித்து இருப்பீர்கள். பத்தில் குரு சிலருக்கு பதவியில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும். இனி நிகழப்போகும் குரு பெயர்ச்சி உங்களுக்கு பதவியில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் சம்பள உயர்வையும் தரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கப்போகிறது. லாப குரு உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தைக் கொடுக்கப்போகிறார். புதிய தொழில் தொடங்கலாம். வெளிநாடு பயணம் செல்ல நினைப்பவர்களுக்கு அதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. வீடு, வண்டி வாகனம் வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது.

திருமண யோகம் கை கூடி வரும்
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3,5,7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. புதிய திட்டங்கள் வெற்றிகரமாக கை கூடி வரும். செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ள தொழில்கள் லாபத்தைத் தரப்போகிறது. கட்டிடத் தொழில் செய்பவர்களுக்கு புதிய முன்னேற்றம் வரும். திருமண சுப காரியம் கை கூடி வரும். வரன் பேசி முடிக்கலாம். மனதிற்கு ஏற்ற மாங்கல்யம் கை கூடி வரும். காரணம் ராசிக்கு 7வது வீடான களத்திர ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுவதால் குரு பலன் வந்து விட்டது. நிறைய நல்ல விசயங்கள் நடைபெறப்போகிறது.

வெளிநாடு படிக்கும் யோகம்
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புத்திர பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகளால் சுப செய்திகள் தேடி வரும். பிள்ளைகளின் சுப காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான யோகம் கை கூடி வந்துள்ளது. இளைய சகோதரர்கள் வீடு சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல நண்பர்கள் அறிமுகம் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு உள்ளது. கவுரவ பதவிகள் தேடி வரும். இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு புகழ் செல்வம் செல்வாக்கு தேடி வரப்போகிறது. கோடிகளைத் தரப்போகும் குருப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

குடும்பத்தில் குதூகலம்
சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே உங்களுக்கு வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகும் குருபகவானால் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கப்போகிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். குடும்ப குரு உங்கள் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறார். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த ஊடல்கள் முடியப்போகிறது. காதலர்கள் பிரிந்தவர்கள் ஒன்று சேரப்போகிறீர்கள். காதல் வாழ்க்கை திருமணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது.

வேலையில் புரமோசன் கிடைக்கும்
குரு உங்கள் ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி என்பதால் உங்களுக்கு பண வரவு அதிகமாக இருந்தாலும் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவாக மாற்றுங்கள் வீடு வாங்கலாம் சொத்துக்கள் வாங்க முயற்சி செய்யலாம். செலவுகள் வந்தாலும் அதை சேமிப்பாக மாற்றுங்கள். தொழிலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலையில் புரமோசன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வளர்ச்சி அதிகரிக்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

வெளிநாடு வேலை வாய்ப்பு
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 10ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கடன் பிரச்சினை தீரப்போகிறது. நோய்கள் நிவர்த்தியாகும். காதல் வாழ்க்கை இனிக்கும். சிலருக்கு புதிய காதல் வரும். ஆயுள் ஸ்தானத்தின் மீது குரு பார்வை விழுவதால் கண்டம் நீங்கும், தடைகள் உடைபடும். நீண்ட நாட்கள் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பதவியில் சிலருக்கு மாற்றம் வரப்போகிறது. வெளிநாடு சென்று வேலை செய்ய முயற்சி செய்யலாம். மாணவர்களுக்கு வெளிநாடு போய் படிக்க வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப தலைவிகளுக்கு இந்த குரு பெயர்ச்சி குதூகலத்தைத் தரப்போகிறது. நிறைய பண வரவையும் மன நிம்மதியையும் தரப்போகிறார் குருபகவான்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications