Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2022: குருபகவானால் விபரீத ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான்

மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் குருபகவான் சில ராசிக்காரர்களுக்கு நன்மையை செய்யும் அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குருபகவான் இன்னும் சில நாட்களில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படப்போகிறது. யார் அந்த ராசிக்காரர்கள் விபரீத ராஜயோகத்தினால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

பொதுவாக குரு பகவான் கோச்சார ரீதியாக 2,5,7,9,11 ஆம் இடங்களில் வந்தால் நன்மையை செய்யும். நமக்கு நடைபெறும் தசாபுத்தியைப் பொருத்தும் நன்மைகள் நடைபெறும். ஒரு கிரகம் அதனுடைய சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு கோச்சார ரீதியாக 6,8,12ஆம் வீடுகளில் மறைவது சிறப்பல்ல என்றாலும் ஆட்சி பெற்று அமரும் கிரகத்தினால் நீசபங்க ராஜயோக அமைப்பு கிடைக்கும்.

விபரீத ராஜயோகம் என்பது, எதிர்பாராத வழியில் ஒருவர் அதிகாரம் அல்லது அந்தஸ்தை அடைவதைக் குறிக்கிறது. 'விபரீதம்' என்ற வார்த்தையே அதன் உள்ளர்த்தத்தை ஓரளவுக்கு விளங்க வைக்கும். முற்றிலும் எதிர்பாராத ஒரு நிலையில், சுலபமான வகையில் அல்லது குறுக்கு வழியில் ஒருவருக்கு மிகப் பெரிய அந்தஸ்து கிடைப்பது அல்லது அரசாளும் வாய்ப்பு கிடைப்பதே விபரீத ராஜயோகம் ஆகும்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்கு 9,12க்குடைய குரு 12ல் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இந்த குரு பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தர இருக்கிறது. 12க்கு உடையவன் 12ஆம் வீட்டில் அமரப்போவது விபரீத ராஜயோகத்தைத் தரப்போகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு யோகம் அதிகம்.ஆரம்ப காலமும் முடிவு காலமும் சோதனையாக இருந்தாலும் இடைபட்ட காலங்களில் வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும்.வெளி மாநிலம் அல்லது வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும்.

 ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்கு 8,11க்குடைய குரு லாப வீடான 11ல் வரப்போகிறார். கடந்த வருடத்தில் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்தவருக்கு இந்த வருடம் சாதகமான முடிவுகள் வர இருக்கிறது. நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு ஏற்படும்.தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியின் முற்பகுதியிலும் இறுதியிலும் திருமணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்கு 7,10ஆம் வீட்டிற்குரிய குரு பகவான் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். சிலருக்கு சொந்தத் தொழிலில் சில சங்கடங்கள் வந்து சேரும். வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும். செய் தொழிலை விட்டு வேறு தொழில் அல்லது வேலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. வியாழக்கிழமை குருபகவான் ஆலயங்களுக்கு சென்று வணங்குவதன் மூலம் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

 கடகம்

கடகம்

கடக ராசியில் பிறந்த உங்களுக்கு குரு பகவான் 8ஆம் இடத்திருந்து 9ஆம் இடத்திற்கு செல்லப் போகிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபடுகளையும், சன்னதியையும் குறிக்கும். குரு 6,9க்குடையர். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவார்கள். ஏற்ற காலகட்டம் இது. 6ஆம் இடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானத்தையும் 9ஆம் இடம் என்பது நீண்ட தூர பயணத்தையும் குறிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சட்டம்,ஜோதிடம்,ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல தனச்சேர்க்கை உண்டாகும்.குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

சிம்மம்

சிம்மம்


சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு 5மற்றும் 8க்குடையவர் குரு 8ல் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அஷ்டம குரு என்று பயப்படுத்துவார்கள்.பயப்பட வேண்டாம். உங்களுக்கு அஷ்டம குரு நன்மையே செய்வார். ஆட்சி பெற்றும் அமரும் குரு என்பதால் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. தொழில் வேலை விசயங்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து நன்மைகள் ஏற்படும். புது வித முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். யாரேனும் ஒருவர் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் நிலைமை சிறப்பாகவே இருக்கும்.

கன்னி

கன்னி

உங்கள் குரு பகவான் 4 மற்றும் 7ஆம் வீட்டிற்குடையர். அவர் 7ஆம் வீட்டில் அமர்கிறார்.கேந்திர ஆதிபத்ய தோஷத்தைப் பெறுகிறார் என்றாலும் ஆட்சி பெற்று அமரப்போகும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது நன்மை. திருமண சுபகாரியங்கள் கை கூடி வரும். வேலை விசயத்தில் கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. புது தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். கணவன் மனைவியுடன் சில பிரச்சினைகள் வரலாம் மிகவும் கவனம் தேவை. குரு இடைபட்ட காலங்களில் ஓரளவு நன்மையைத் தருவார்.

துலாம்

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு குரு 6 மற்றும் மூன்றாம் வீட்டிற்கு உடையவர். ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். சில நேரங்களில் கடன்,நோய் சம்பந்தப்பட்ட வகையில் மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். பிற்பகுதியில் புது முதலீடுகள் கூடாது. பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம் யாரை நம்பியும் பணம் கடனாகத் தர வேண்டாம். திடீர் சொத்து சேர்க்கை ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு யோகமான காலம் என்றே சொல்லலாம். காரணம் 5,2க்குடைய குரு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய வீட்டிற்கு வரப் போகிறார். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். எந்த புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1. பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நல்ல தன வரவும் மன நிம்மதியும் கிடைக்கும்.

தனுசு

தனுசு

உங்கள் ராசி அதிபதியும் 4ஆம் வீட்டு அதிபதியுமான குரு சுக ஸ்தானமான 4ஆம் வீட்டில் அமரப் போகிறார். கடுமையான கேந்திர ஆதிபத்ய தோஷம். எனினும் உங்கள் ராசி அதிபதி உங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார். அம்மாவிற்கு ஆரோக்கிய பிரச்சினை வரலாம். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். வீடு அல்லது வேலை ரீதியான இடங்களில் இட மாற்றம் நிகழும். இந்த குரு பெயர்ச்சி மனைவி அல்லது தாய்க்கு பிரச்சினைகளைக் கொடுக்கும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்கு 3,மற்றும் 12ஆம் வீட்டிற்குடைய குரு பகவான் 3ஆம் இடத்தில் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். கடந்த ஆண்டுகளில் குருப்பெயர்ச்சியின் பிற்பகுதியில் வாக்கு காப்பாற்றத் தவறுதல்,வம்பு, வழக்கு பிரச்சினைகளை சந்தித்த நீங்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை சார்ந்த விசயங்களில் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். கடன் கட்டுக்கள் இருக்கும் அல்லது உதவி புரிவதற்கு ஆட்கள் வருவார்கள். தங்களின் எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வகையில் சந்தோஷம் அதிகரிக்கும் கவனம் தேவை.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்கு 2 மற்றும் 11ஆம் வீட்டிக்குடைய குரு பகவான் 2ஆம் வீட்டிற்கு வரப் போகிறார். பேச்சிற்கு மதிப்பு கூடும். வாக்கில் கவனம் தேவை வம்பு, வழக்கு ,நீதிமன்ற வழக்குகள் தங்களுக்கு சாதகமாக வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும், மனதில் நினைத்த தன விசயங்கள் தங்களுக்கு சாதகமாக முடியும். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் ரீதியான முன்னேற்றம் நிகழும். யாருக்கும் ஜாமீன் போடாதீர்கள். சொந்தத் தொழில் ஆதாயம் பெருகும்.

மீனம்

மீனம்


குருபகவான் உங்கள் ராசிநாதன். தொழில் ஸ்தான அதிபதியும் அவரேதான். உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவது சோதனை மிகுந்த காலம். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. குரு பெயர்ச்சியின் முக்கால் பகுதி வரை கடன் வேலை சார்ந்த விசயங்களில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து பேதங்கள் வரும். ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. சொந்த முதலீடுகள் வேண்டாம். குரு பெயர்ச்சியின் இறுதியில் தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு அனுகூலம் உண்டு. வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+