குருப்பெயர்ச்சி: மேஷ ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. சம்பள உயர்வு, பதவி உயர்வு இடமாற்றம் எல்லாம் கைகூடும்

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

குருப்பெயர்ச்சி எப்போது?

2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம்.

guru-peyarchi-palan-for-mesham-you-can-learn-about-the-benefits-of-guru-peyarchi-for-mesham-rasi-pe

குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும்.

மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான். மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும்.

பார்வை பலம்

பார்வை பலம் பார்ப்பதில் 5, 9 ஆம் பார்வை மிகவும் விசேஷமானது. அங்கிருந்து குருவின் பார்வை 5 ஆம் பார்வையாக துலாம், 7 ஆம் பார்வையாக தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. இதில், துலாம், கும்பத்துக்கு குரிவின் விஷேச பார்வை அமையும். அதற்கு அடுத்தபடியாக தனுசு ராசியினருக்கு குரு பார்வை சிறப்பாக இருக்கும். குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.

மேஷ ராசி குருப்பெயர்ச்சி பலன்

அந்த வகையில், இந்த குருப்பெயர்ச்சியில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. திருவெண்காடு சென்று தரிசனம் செய்வது நல்லது. குருவுக்கு ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் வலிமையானது. மேஷ ராசியினருக்கு 7, 9, 11 ஆம் இடத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

பண தட்டுப்பாடு நீங்கும்

பெற்றோர், பெரியோருக்கும் உங்களுக்கும் இருந்து வந்த இடைவெளிகள் குறையும். பூர்வீக சொத்து அமைப்புகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நிம்மதியாக அந்த சொத்துகளில் அமரும் யோகம் உண்டாகும். பெற்றோர், பெரியோருக்கு அனுகூலம் ஏற்படும். லாபம் கிடைக்கும். பணத் தட்டுப்பாடு தீரும். முதலீடுகள் வரும். அனுகூலமான அமைப்பு ஏற்படும்.

பயணம்

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். உதவிக்கு யாருமே இல்லை என்ற மன அழுத்தங்கள் மாறும். குடும்பத்தில் அந்நியோன்யம் ஏற்படும். துணையின் நீண்ட நாள் கஷ்டங்கள் தீரும். தேக ஆரோக்கியத்தில் நன்மை ஏற்படும். துணையின் மேல் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்துடன் உள்ளூர், வெளியூர், கடல் கடந்து பயணம் செய்யும் யோகம் உண்டு.

பதவி உயர்வு

எப்போதும் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நீங்கள் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். மேஷம் இருக்கக்கூடிய வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். வீட்டில் புனரமைப்பு, புதிதாக கட்டுவது, புதிதாக முதலீடு செய்வது போன்றவை நடக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும்.

அனுகூலம், வெற்றி

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து அனுகூலம் ஏற்படும். மேஷ ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். கண்டிப்பாக தெய்வ தரிசனங்கள் செய்வீர்கள். ஆத்ம ரீதியான அனுகூலம் ஏற்படும். குரு லாபத்தை பார்ப்பதால் லாபம் வரும். அதன் மூலம் வெற்றி வரும். நீண்டநாட்களாக இருந்து வந்த இழுபறியான நிலைமைகள் மாறும்.

கடன்கள் தீரும்

கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள். திருமண அமைப்புகளை தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. ஒரு வருடம் நல்ல அமைப்பாக உள்ளதால் திருமணத்தை முடிப்பது நல்லது. ஏதாவது பாதிப்பு இருந்தாலும் வெள்ளை கொடி காட்டுவது நன்மை பயக்கும். புதிய வரவுகளுக்கு உத்திரவாதம் உண்டாகும்.

குடும்பத்தில் அதிக குதூகலத்தையும், மகிழ்ச்சியையும் பெறக்கூடிய ராசியாக நீங்கள் இருப்பீர்கள். மாற்றம், முன்னேற்றத்தைக் கொடுக்கும் காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+