குருப்பெயர்ச்சி: ரிஷப ராசியினர் கொடி கட்டி பறக்கும் யோகம்.. வாழ்க்கையே மாறப்போகும் சூப்பர் அதிர்ஷ்டம்
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம்.

குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும்.
மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான். மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும்.
பார்வை பலம் பார்ப்பதில் 5, 9 ஆம் பார்வை மிகவும் விசேஷமானது. அங்கிருந்து குருவின் பார்வை 5 ஆம் பார்வையாக துலாம், 7 ஆம் பார்வையாக தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. இதில், துலாம், கும்பத்துக்கு குரிவின் விஷேச பார்வை அமையும். அதற்கு அடுத்தபடியாக தனுசு ராசியினருக்கு குரு பார்வை சிறப்பாக இருக்கும். குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம் - ரிஷபம் ஜென்ம குரு விலகி 6,8,10 ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கல்வியிலும் நல்ல மாற்றங்கள் இருக்கும். உத்யோகம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். கல்வியில் இருந்த மந்த நிலை மாறும்.
கடன்கள் நிவர்த்தி
அடுத்த இரண்டரை வருடம் உங்களுக்கு அருமையாக இருக்கும். விடாபடியாக நின்று காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்கள் நிவர்த்தியாகும். உங்களுக்கு வரவேண்டிய பழைய பாக்கி வந்து சேரும். ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்னைகள் சரியாகும். சிகிச்சையில் முன்னேற்றம் இருக்கும்.
வெளிநாடு பயணம்
ஆயுள் தொடர்பான கவலை நீங்கி தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு பயணம் தொடர்பான முயற்சியில் இருப்போருக்கு பயணம் நல்லபடியாக அமையும். புது உத்வேகத்துடன் துடிப்பாக இருப்பீர்கள்.
தொழில் தொடங்கும் யோகம்
தொழிலில் புதிய முயற்சிகள் அல்லது புதிய தொழில் தொடங்குவது இந்த காலத்தில் வெற்றியை கொடுக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மனம் நிம்மதியடையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து சரியான நேரத்தில் உதவி கிடைக்கும்.
சுபகாரிய யோகம்
புதிய ஒப்பந்தங்கள் கையழுத்தாகும். சமூகத்தில் புகழ், மதிப்பு, மரியாதை உயரும். கலைத்துறை, ஊடகம், சினிமா ஆகியவற்றில் இருப்போருக்கு நல்ல உயர்வு உண்டு. வாய்ப்புகள் தேடி தேடி வரும். குரு இரண்டாம் இடத்துக்கு வருவதால் தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறும்.
பேச்சில் கவனம்
இருப்பினும் இந்த ஒரு வருடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். தகாத வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக செயல்படுதல், கூடா நட்பு ஆகியவை உங்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக மாறும். முதலீட்டில் மிகுந்த கவனம் தேவை.
ஆரோக்கியத்தில் அக்கறை
பல், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும். சளி, சைனஸ் பிரச்னை இருப்போர் உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் வயதானவர்களின் உடல்நலத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். மனம் அவ்வபோது அலைபாயும். அப்போது தெளிவான சிந்தனையுடன் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
-
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications