மகர ராசிக்கு விபரீத ராஜயோகம்.. அதிர்ஷ்டம் பணம் கொட்டும்.. கடன் கொடுத்தாலோ, வாங்கினாலோ பெரும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி ஆரம்பமாகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Guru peyarchi Magaram

மகரம்

கடந்த 8 ஆண்டுகளாக நன்மைகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் மகர ராசியினர். ஏழரை சனி எப்போது ஆரம்பித்ததோ அப்போதிருந்து பல்வேறு வலிகளை அனுபவித்து வந்திருப்பார்கள். இந்த ஆண்டு நடைபெறும் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கப் போகிறது. 2 இல் ராகு 8 இல் கேது 6 இல் குரு மறைவது பயத்தை ஏற்படுத்தும்.

விபரீத ராஜயோகம்

ஆனால், 3க்கு உரியவன் 6 இல் மறைவது மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் எனும் வகையில் குரு மறைவால் விபரீத ராஜயோகத்தை அனுபவிக்கப் போகிறீர்கள். 8 ஆண்டுகளாக உங்களுக்கு கிடைக்காத அனைத்து விஷயங்களும் இனி கிடைக்கும். மனதளவில் உடைந்து போய் குழப்பத்துடன் வாழ்பவர்கள் இனி புது தன்னம்பிக்கையுடன், தைரியத்துடனும் செயல்படுவார்கள்.

திருமணத் தடை நீங்கும்

இதுவரை இருந்து வந்த திருமணத் தடைகள் நீங்கி, திருமண யோகம் கைகூடி வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். 2 இல் ராகு வருவதால் தனம் சார்ந்த விஷயங்களில் ஜாக்பாட், யோகத்தைப் பெறுவீர்கள். அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி உண்டாகும். வாக்கு வன்மை மேம்படும். சமுதாயத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை உண்டாகும்.

வெளிநாட்டு பயணம்

சொத்துகள் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். கடன்களை எல்லாம் அடைத்து முழுமையான விடுதலையைப் பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் உள்நாட்டுக்குத் திரும்புவார்கள், சிலர் வெளிநாட்டு வேலை கிடைத்து செட்டிலாகும் யோகம் உண்டாகும். 12 ஆம் இடத்தில் குரு பார்ப்பதால் கடல் கடந்த வாணிபம், கடல் கடந்த நல்ல பயணங்கள் உண்டாகும். இந்த பயணங்கள் மூலமாக நல்ல யோக பலத்தைப் பெறுவீர்கள்.

குழந்தை பாக்கியம்

நீண்ட நாள்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். விரும்பிய கல்லூரிகளில் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வழக்கில் நல்ல சாதகமான தீர்ப்புகள் வந்து சேரும். தகப்பானாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் அனைத்தும் நீங்கும்.

நல்ல மாற்றங்கள்

மகரத்தைப் பொருத்தவரை எது பேசினாலும் தந்தைக்கு எதிராகவே அமையும். அந்த நிலைகள் அனைத்தும் மாறும். தந்தையும், பிள்ளையும் சேர்ந்து வாழும் யோகம் உண்டாகும். நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல பதவி உயர்வு, பொறுப்புகள், புதிய பட்டங்களைப் பெறுவீர்கள். நீங்களே நினைத்து பார்க்காத அளவுக்கு நல்ல பொறுப்புகள், மாற்றங்கள், அங்கீகாரங்கள் உண்டாகும்.

பேச்சில் கவனம்

செலவுகளைக் கட்டுப்படுத்தி சுப விரையம் செய்யும் காலகட்டமாக இருக்கும். ஏழரை சனியின் நகர்வு உங்களுக்கு இனி நன்மையைத் தரும். அதேபோல, குரு மறைவது பொற்காலத்தை உண்டாக்கித் தரும். அடுத்த ஒரு வருட காலத்துக்கு கடன் வாங்காமல் இருப்பது நல்லது. யாரோடு பேசினாலும் பழகினாலும் நிதானமாக இருப்பது நல்லது. உங்கள் பேச்சினால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. பணம் சார்ந்த விஷயங்களில், கொடுக்கல் வாங்கலில் மிகுந்த எச்சரிக்கை தேவை. யாரையும் சிபாரிசு செய்யாமல் இருப்பது நல்லது.

தெய்வ வழிபாடுகள்

மகர ராசிக்காரர்களைப் பொருத்தவரை கோச்சார ரீதியில் நாக தோஷம் வருவதால், சர்ப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க பெண் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்ல பலன்களைத் தரும். சுமங்கலி தானம் செய்வது நல்லது. மஞ்சள், குங்குமம், தாலி 10 பேருக்கு தானமாக வழங்கு அமோகமான நன்மை பயக்கும். அம்மன் கோயில்களில் ஜோடி தீபம் ஏற்றுவது நல்லது. இல்லற வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+