Guru Peyarchi: மேஷம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. பணம் கொட்டும்.. கடன் தீரும் யோகம்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். இரண்டாவது வருமானம் வந்து சேரக்கூடிய காலகட்டமாக இருக்கும். புதிதாக ஏதாவது தொழில் தொடங்கலாம் என்கிற எண்ணம் தோன்றும். இதன் மூலமாக வரும் வருமானத்தை சேமிப்புக்காக மட்டும் பயன்படுத்துவதற்காக உழைப்பைப் போடுவீர்கள்.
குரு பகவான்
பொருளாதாரம் ரீதியாக மேஷம் ராசியினருக்கு குரு பகவான் முழு ஒத்துழைப்பைத் தரப் போகிறார். இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பெரும்பாலான மேஷ ராசியினருக்கு கால் வலி, உடம்பு வலி வரக்கூடிய வாய்ப்புள்ளது. அதில் கவனமாக இருக்க வேண்டும்.
மனநிம்மதி ஏற்படும்
தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். ஜூன் மாதத்திற்குப் பிறகு உங்களை வாழ்க்கையை மாற்றி ஒரு உங்களுக்குத் தகுந்தாற் போல மாற்றி நிதான நிலைக்குச் செல்வீர்கள். ஒரு நிதானத்தையும், நிம்மதியையும் பெறக்கூடிய சூழல் ஏற்படும். மேஷ ராசியினர் பலர் ஆன்மீகத்திற்குள் செல்லும் நிலை ஏற்படும்.
ஆரோக்கியம்
குரு ஸ்தலங்களுக்குச் செல்வது, விஷ்ணு வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். மேஷம் ராசியினர் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நேர்மறையான பலன்களைப் பெறுவீர்கள். முடிந்த அளவுக்கு இயற்கை சம்பந்தப்பட்ட மருத்துவ முறைகளை எடுத்துக் கொள்வது நல்லது. மேஷ ராசியினருக்கு மன அழுத்தங்கள் தீரும். அக்குபஞ்சர் போன்ற சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்வது குழந்தைப் பேறு சிகிச்சை பெறுபவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
திருமண யோகம்
நிறைய பிரிவினைகளைப் பார்த்து வந்திருப்பீர்கள். இந்த ஆண்டு மன நிம்மதி பெறுவது உறுதி. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு திருமண யோகத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். கடனில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளியில் வரும் வாய்ப்பு ஏற்படும். கடனை அடைக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். ஜூன் மாதத்தில் இருந்து நல்ல வழிமுறைகள் கிடைக்கும். பணவரவு உண்டாகும்.
வழிபாடு
தொழில் தொடங்குவதாக இருந்தால் ஜூன் மாதத்திற்குப் பிறகு தொடங்குவது நல்லது. எந்தவொரு விஷயத்திற்கும் அவசரப்படாமல் நிதானமாக செய்து முடிப்பது வெற்றியைத் தரும். குடும்ப சூழல்கள் வரும்போது கவனமாக இருக்க வேண்டும். தனிமைக்குள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வது, தீபமேற்றுவது அனுகூலத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications