Guru Peyarchi: துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழில் தொடங்கும் யோகம்
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம் [Guru Peyarchi].
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசிக்காரர்களுக்கு பிரிந்தவர்கள் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். உங்களுக்கு எல்லா விஷயங்களும் கைகூடி வரும் நல்ல காலகட்டமாக இருக்கும். இடமாற்றம், அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவது போன்ற யோகங்கள் உண்டாகும். சுய ஒழுக்கத்தில் சிறு சிறு திருத்தங்களை செய்து கொள்வது நல்லது. இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்.
திருமண யோகம்
சுக்கிரனுக்கான ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது. சுக்கிரன், குரு என்று வருவதால் திருமண யோகம் உண்டாகும். குருவின் பரிபூரண ஆசிர்வாதம் கிடைப்பதால் பிடித்த மாதிரியான மண வாழ்க்கை அமையும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், ஆரோக்கியம் சார்ந்த, வாழ்க்கை சார்ந்த முறையில் மாற்றம் செய்வது அவசியமாகும். உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது. இயற்கையாகவே குழந்தை பாக்கியம் கிடைக்கும் யோகமும் உண்டு.
தொழில் தொடங்கும் யோகம்
ஜூன் மாதத்திற்குப் பிறகு தொழில் தொடங்குவது ஏற்றத்தைக் கொடுக்கும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். கையிருப்பு பணம் இருந்து கொண்டே இருக்கும். கடனை முழுதாக அடைக்கும் யோகம் உண்டு. கடனை அடைப்பதற்கான முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். மீண்டும் கடன் வாங்கி சிக்கிக் கொள்வது, பணத்தை முடக்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
வீடு, நிலம் வாங்கும் யோகம்
தன் பக்கம் இருக்கும் நியாயத்தை, தர்மத்தை பேசி எதிரிகளிடம், வழக்குகளில் வெல்வீர்கள். சொத்துகள் வாங்குவதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீடு, நிலம் வாங்குவதற்கு திட்டமிடுவது நன்மையைத் தரும். அலட்சியப்போக்கு உங்களுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்திலும், உணவு சார்ந்த விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
காசிக்குச் சென்று அங்குள்ள பிரகஸ்பதியை வழிபாடு செய்வது அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். துலாம் ராசியினருக்கு நிறைய கடல் தாண்டிய பயணங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று அதற்கேற்றவாறு உங்களை தகவமைத்துக் கொள்வதே உங்களுக்கு நிறைய ஏற்றத்தைத் தரும். வெளிநாடு செல்பவர்களுக்கு மே மாதத்திற்குப் பிறகு நல்ல காலகட்டடமாக இருக்கும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications