Guru Peyarchi: 2026 இல் குருப்பெயர்ச்சி எப்போது?.. பொதுப் பலன்கள் முழு விவரம் இதோ
Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் சிறப்பு பலன்களைப் பெறும் ராசிகள், பொதுப் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

ஒரு சிலருக்கு புதனால் பாதிப்புகள் இருந்திருக்கும். அந்த நிலைமையும் இந்த காலகட்டத்தி2ல் மாறும். திருமணத் தடைகள் நீங்கும். சுபகாரியத் தடைகள் ஏதேனும் இருந்தால் மீண்டும் அதனை இயக்கக்கூடியதாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும். சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சிம்ம ராசியினருக்கு நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும். திருமணமானவர்களுக்குள் இருந்து வரும் பிரச்சனைகள் நீங்கி புரிதல் ஏற்படும்.
சிம்ம ராசிக்கு குருவால் விடுதலை
சிம்ம ராசி மற்றும் லக்கினம் சார்ந்த அதீத அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெறக்கூடிய யோகம் உண்டாகும். மாணவர்கள் நிறைய பேர் அழுத்தத்தில் இருந்திருப்பார்கள். நிறைய முயற்சிகளைப் போட்டிருந்தாலும் எங்கேயோ எதையோ தவறாக செய்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகளைக் கொடுத்திருக்கும். அதுபோன்ற நிலைமைகள் எல்லாம் மாறும்.
குருப்பெயர்ச்சியில் கும்ப ராசியினருக்கு குரு வாய்ப்புகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். திறனை வளர்த்துக் கொள்ள அற்புதமான காலகட்டமாக இருக்கும். சனியின் தாக்கம் கும்பத்துக்கு இருப்பதால் உங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்வதற்கான காலமாக இருக்கும். எதையும் விரிவுபடுத்தாமல் இருப்பது நல்லது.
தொழில் தொடங்கும் ராசிகள்
குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் ஜூன் மாதத்திற்குப் பிறகு தொழில் தொடங்குவதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கடகம், மகரம், ரிஷபம், மீனம் ஆகியோர் தொழில் தொடங்குவதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். மீன ராசியினருக்கு பூமி சார்ந்த விஷயங்கள், வீடு சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கும். திருமண யோகம் உங்களுக்கு கைகூடி வரும்.
பணவரவு
மேஷம் கடகம், தனுசு, மகர ராசிக்கு பண வரவு நன்றாக இருக்கும். அற்புதமான பண வரவு ஏற்படும் காலகட்டமாக இருக்கும். வம்பு, வழக்குகள், பிரச்சனைகளில் சிக்கியிருக்கும் சிம்ம ராசியினர் அதிலிருந்து முழுவதுமாக வெளிவர முடியாத சூழல் ஏற்படும். மீன ராசியினருக்கு குரு பார்வை நன்றாக இருந்தாலும் சிலருக்கு பாதிப்புகளைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
கொடுக்கல் வாங்கலில் இருக்கும் தனுசு ராசியினர் யாரையும் முழுவதுமாக நம்பாமல் இருப்பது நல்லது. சட்டரீதியான பிரச்சனைகளை சந்திக்கும் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் மாற்றங்களைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
கடன் தீரும்
கன்னி ராசியினர் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருந்திருப்பீர்கள். எப்படி அடைப்பது என்று தெரியாமல் தவிக்கும் நிலை இருந்திருக்கும். இருப்பினும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி கடனை கட்டுப்படுத்துவீர்கள். தனுசு ராசியினரும் ஏதாவது பூமியை விற்பது, அதை மாற்றி, இதை மாற்றி கடனை அடைப்பது என யோசிக்காமல் தொழில் செய்து எப்படி கடனை அடைக்க முடியும் என்று பார்ப்பது ஏற்றத்தை தரும்.
-
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications