Guru Vakram: லக்கி பாஸ்கராக மாறும் சிம்ம ராசி.. அடுத்தடுத்து ஜாக்பாட் காத்திருக்கு.. என்ஜாய்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு புதிய நபர்களின் வருகையால் வாழ்க்கையே மாறும். அந்த நபர்களின் வருகை உங்களுக்குப் பரவசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். வர வேண்டிய பாக்கியங்கள் எல்லாம் உங்களுக்கு கண்டிப்பாக வந்து சேரும். நல்ல நட்புகள் உருவாகும்.
முயற்சிகளில் வெற்றி
எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அந்த முயற்சியால் பெரிய அளவுக்கு வெற்றியைக் கொடுக்கும். பல்வேறு பாதிப்புகள், சிக்கல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் சந்தித்து வந்திருந்தாலும் இந்த குரு வக்கிரமாக இருப்பது உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கும்.
நல்ல வாழ்க்கை அமையும்
வாழ்க்கையில் எந்த விஷயங்களை இழந்திருந்தாலும் இப்போது வரப்போகும் புதிய நபரால் சந்தோஷம் ஏற்படும். நல்ல வாழ்க்கையைப் பெறுவீர்கள். வாழ்க்கைக்கு என்ன தேவை என்கிற புரிதல் ஏற்படும். பண வரவில் இருந்த தடைகள் எல்லாம் நீங்கும். தேங்கிக் கிடந்த, வர வேண்டிய பணங்கள் வந்து சேரும். எதிர்பார்க்காத பதவி உயர்வு கிடைக்கும்.
நன்மைகள்
எதிர்பார்க்காத துறை, நபரிடமிருந்து நல்ல விஷயங்கள் நடக்கும். சிம்மத்தைப் பொருத்தவரை பல்வேறு விஷயங்கள் நேர்மறையாக உள்ளன. அண்ணன் தம்பி சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதம், சிக்கல்கள் எல்லாம் தீரும். வீட்டின் மேல்தளத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். தண்ணீர் குழாய் பிரச்சனை போன்றவற்றை சீரமைப்பீர்கள்.
ஜாக்பாட்
சிம்மத்திற்கு இடமாற்றம் 100 சதவீதம் நன்றாக இருக்கும். ஜாதகத்தில் ஒரு சிலருக்கு கிரகங்கள் வக்கிரமாக இருக்கும்போது ஜாக்பாட் அடிக்கும் யோகம் உண்டாகும். லக்கி பாஸ்கராக மாறுவீர்கள். நல்ல மாற்றங்கள் வரும் காலகட்டமாக இருக்கும். மங்கள காரியங்கள் கண்டிப்பாக நடக்கும். மங்கள இசை, மங்கள வாத்தியம் உங்கள் வீட்டில் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
மதிப்பெண், வழிபாடு
சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 95 சதவீதம் நன்மைகளைப் பெறும் யோகமான காலகட்டமாக இருக்கும். உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்வது, புதன்கிழமை தோறும் பெருமாளை வழிபாடு செய்வது நல்ல முன்னேற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications