Guru Vakra Peyarchi: வெளிநாட்டுக்கு பறக்கப் போகும் கடக ராசியினர்.. இழந்ததெல்லாம் கிடைக்கும் யோகம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு போன 2 வருடம் முழுவதும் அஷ்டம சனியில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். விரயத்தில் குரு வக்கிரமாக அமர்ந்திருக்கிறார். குரு வக்கிரமாக இருக்கும் போது கடக ராசியினருக்கு வெளிநாட்டில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்ல அற்புதமான காலகட்டமாக இருக்கும். எந்தப் பிரச்சனை வந்தாலும் நீங்கள் மட்டும் அதிலிருந்து தப்பிப்பீர்கள்.
கவலைகள் நீங்கும்
அதிகமாக உழைக்கும் காலகட்டமாக இருக்கும். அதிக நேரம் தூங்கும் சூழ்நிலை ஏற்படும். ஒரு விதத்தில் நன்மைகள் கிடைக்கும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட கவலைகள் நீங்கும். குழந்தைகளுக்குத் தேவையான புதிய செலவுகளை செய்வீர்கள். புதிதாக கல்விக் கட்டணம் கட்டுவீர்கள். வண்டி வாகனங்கள் வாங்கிக் கொடுக்கும் யோகம் உண்டாகும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.
நகை வாங்கும் யோகம்
வாகனங்கள் வாங்குவது, அடகு வைத்த நகையை வாங்கும் யோகம் ஏற்படும். சேமிப்புகள், முதலீடுகளில் கவனம் செலுத்த தொடங்குவீர்கள். குரு என்பது ஆன்மீகத்துக்கான, நியாயத்துக்கான, தர்மத்துக்கான கிரகம். அமைதியான தோற்றம், அமைதியான கிரகம் தான் குரு. முடிவுகளைத் தாமதமாக எடுத்தாலும் சரியான முடிவுகளாக இருக்கும். ஆன்மீக யாத்திரைகள், எண்ணங்கள், தீர்த்த யாத்திரைகள், முன்னேர்கள் சம்பந்தப்பட்ட யாத்திரைகள், வீட்டில் நல்ல காரியங்கள், சுப காரியங்கள் எல்லாம் நடக்கும்.
மரியாதை
குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வீர்கள். காசி, கயா, ராமேஸ்வரத்திற்கு செல்லும் யோகம் உண்டாகும். வடமாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது. இழந்த மரியாதையை மீட்டெடுக்கும் சூழல் ஏற்படும். புதிய வேலை, புதிய நட்பு, புதிய ஊர் கிடைக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுபோல உங்களுக்கு கட்டாயம் மாற்றம் வரும். அந்த மாற்றம் உங்களுக்கு நல்ல மாற்மாக இருக்கும்.
வழிபாடு
சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். சந்நியாசிகள், மகான்கள், வியாசர், விஜயேந்திரரை வழிபாடு செய்வது அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications