• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று உலக இதய தினம்..இதயமே..இதயமே..சூரியனும் குருவும் உங்க ஜாதகத்தில் எப்படி இருக்காங்க?

Google Oneindia Tamil News

சென்னை: மனித உறுப்புகளில் மிக முக்கியமானது ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கும் உறுப்பு இதயம். இதயத்தின் முக்கியத்துவம் குறித்து உணர்த்த ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி உலக இதயநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நோய்க்கு மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நோய் எதனால் வந்தது அதற்கு ஏதாவது ஆன்மீக பரிகாரம் உள்ளதா என்று ஜோதிடரையும் இன்றைய காலத்தில் பார்க்கின்றனர். இதய நோய் எதனால் வருகிறது. இதய நோய் தீர மருத்துவ ஜோதிடம் என்ன பரிகாரம் கூறியிருக்கிறது என்று பார்க்கலாம்.

கார்டியோவாஸ்குலர் நோய்கள் என குறிப்பிடப்படும் இதயம் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் இது மும்மடங்காகி இருக்கிறது. மிகவும் இளம் வயதினர் மத்தியில் இதய நோய் பாதிப்பு அதிகரித்திருப்பது தான் மேலும் கவலைக்குறியதாக இருக்கிறது.

மார்பக வலி , தாடையில் அல்லது பின்பக்கம் வலி (தோள்பட்டைகளுக்கு இடையே) காரணம் இல்லாத களைப்பு அல்லது சோர்வு, மூச்சுத்திணறல், இருமல், மயக்கம், திடீர் கால் வீக்கம் அல்லது நீர் சேர்வது ஆகியவை கவனத்தில் கொள்ள வேண்டிய அறிகுறிகள்.

குரு பெயர்ச்சி பலன்: 2023 புத்தாண்டில் அதிர்ஷ்ட தேவதையின் அருளால் யாருக்கு பதவிகள் தேடி வரும்? குரு பெயர்ச்சி பலன்: 2023 புத்தாண்டில் அதிர்ஷ்ட தேவதையின் அருளால் யாருக்கு பதவிகள் தேடி வரும்?

இதயநோய் பாதிப்பு

இதயநோய் பாதிப்பு


தமிழ்நாட்டில் இளம் வயதினர் மத்தியில் இதயநோய் என்பது அதிகரித்தபடியே உள்ளது. கொரோனா நேரத்தில் இதர தொற்றா நோய்களுக்கு உரிய கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இணை நோய்களில் முக்கியமானவை ரத்த அழுத்தமும் சர்க்கரை குறைபாடும்தான். சிறுநீரக பிரச்னைகள் வருவதற்கும் இவைதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, படபடப்பு உள்ளவர்களுக்கு, குடும்பத்தில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கெல்லாம் ரத்த அழுத்த நோய் வரலாம். உடற்பயிற்சி, உணவுப் பழக்க வழக்கங்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மன அமைதி, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் இதயம் காக்கலாம். இதய நோய் வராமல் தடுக்கலாம். ஆரோக்கியமானதை மட்டுமே சமைத்துச் சாப்பிட வேண்டும்.

ஜோதிட காரணங்கள்

ஜோதிட காரணங்கள்

உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கு தூக்கம் அவசியம். தூக்கமின்மை இதய நோய், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற நல்ல தூக்கம் அவசியம். இன்றைய இயந்திரமயமான உலகில் நாம் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உட்கார்ந்த இடத்திலிருந்தே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிடுகிறோம். இதனால் உடலானது நோய்களின் கூடரமாகிறது. மருத்துவரிடம் உடலை காண்பிப்பது போல ஜோதிடரிடம் ஜாதகத்தைக் காண்பித்து அதற்கு ஏற்றவாறு தனது வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதயத்தை கட்டுப்படுத்தும் சூரியன்

இதயத்தை கட்டுப்படுத்தும் சூரியன்

இதயத்தின் இயக்கத்தை சூரியன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஜாதகத்தில் எட்டாம் பாவாதிபதியாக சூரியன் அமைந்து, அந்த சூரியனோடு தீய கிரகங்களின் இணைவு ஏற்பட்டு, லக்னமும், லக்னாதிபதியும் பலமிழந்து இருந்தால் அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. சூரியன்தான் இதய நோய்கள், கண் நோய்கள், முதுகு வலி, முதுகெலும்பு தண்டு வடத்தில் பிரச்னைகள், ரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்பட காரணமாகிறது. ஜோதிட ரீதியா பார்க்கும் போது சூரியன் ராஜ கிரகம். இதயம் ராஜ உறுப்பு. ஜாதகத்துல சூரியன் கெட்டால் இதய முடக்கம், மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்

குரு பகவான் அருள் தேவை

குரு பகவான் அருள் தேவை

இதயத்துக்கு தேவை குரு பலம். குரு கெட்டாலும் இதய பிரச்சினை வரும். பொருளாதார திட்டமிடல், சிக்கனம்,சேமிப்பு இல்லாமை ,அஜீரணம்,வாயு கோளாறுகள், இதய படபடப்பு இருந்தால் உங்க ஜாதக கட்டத்தில் குரு அடிவாங்கியிருக்கார் அதாவது நீசம், மறைவு பெற்று பாதிக்கப்பட்டிருக்கார்னு சொல்லலாம். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் உடன் குரு சேர்க்கை பார்வை இருந்தால் உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதய நோய்க்கு காரணம்

இதய நோய்க்கு காரணம்

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் 4ல் இருந்து சனி மற்றும் செவ்வாயால் பார்க்கப் பெற்றால் இதய நோய் வரும். கடகம் சிம்மம் இந்த ராசிகளில் கிரகம் பாதிக்கப்பட்டு இருந்து சனி, சந்திரன், செவ்வாய் தசை புத்தி நடக்கும் போது இதய நோய் வரும். இருதய கோளாறுகளுக்கு சூரியனும், சந்திரனும் பொறுப்பாகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் அவருக்கு இருதயக் கோளாறு ஏற்படாது. மாறாக, சந்திரனுக்கு பாவ கிரகங்களின் சேர்க்கை, கிரக யுத்தம் காணப்பட்டால் இருதயக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இதய பலவீனத்திற்கு காரணம்

இதய பலவீனத்திற்கு காரணம்

ஒருவரின் ஜாதகக் கட்டத்தில் மனோகாரகரான சந்திரன் பலவீனமடைந்திருந்தால் அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினை ஏற்படும். சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
ஜோதிடத்தில் ரத்தத்திற்கு உரிய கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு ராகு, சனி ஆகியவை பகையாகும். ஒரு சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்+சனி அல்லது செவ்வாய்+ராகு சேர்க்கை காணப்படும். இவர்களுக்கு செவ்வாய் தசை காலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

பரிகாரம்

பரிகாரம்

உடம்பில் நோய் பாதிப்பு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க குல தெய்வ வழிபாடு அவசியம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். அமாவாசை நாட்களில் பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரியாக செய்தாலே நோய்கள் பாதிப்பு ஏற்படாது. தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும். தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்யும் போது ஆதித்ய ஹிருதயம் சொல்லலாம். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஜாதகத்தில் சூரியன், குரு பாதிக்கப்பட்டவர்கள் இதயத்தில் படும் வகையில் வேல் உருவ டாலர் கழுத்தில் போடலாம். தாமிரத்தில் வேல் உருவ டாலர் செய்து கழுத்தில் அணிய இதய பாதிப்புகளை தவிர்க்கலாம்.

English summary
World Heart Disease Awareness Day is observed on 29th September every year. At the same time as seeing a doctor for treatment, people nowadays also look to astrologers to see if there is any spiritual remedy for the cause of the disease. What causes heart disease? Let's see what medical astrology has suggested for treating heart disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X