Dhanusu: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. புதிய வேலை கன்ஃபார்ம்
January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் தனுசு ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் குரு ராசியைப் பார்க்கிறார். குரு உங்களைப் பார்ப்பதால் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் விலகும். நல்ல பணப் பரிவர்த்தனை உண்டாகும். தொழிலில் வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் வேலை முயற்சிகள் கைகூடும். விஐபிக்களின் தொடர்புகள் கிடைக்கும். ராசியில் சூரியன் இருப்பதால் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும்.
வெற்றி மேல் வெற்றி
அரசியல்வாதிகளுக்கு தலைமையுடன் நெருக்கமாகக்கூடிய யோகம் ஏற்படும். இழந்த பதவிகள் திரும்பக் கிடைக்கும் யோகம் உண்டு. 2 ஆம் இடத்திற்கு அதிபதியான சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருப்பதால் நல்ல வருமானம் கிடைக்கும். 3 இல் இருக்கும் ராகு முயற்சிகளில் வெற்றியைத் தருவார். துர்க்கையின் அனுக்கிரகம் பரிபூரணமாக இருக்கும். மனதில் நினைக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றி பெறும். ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றினால் காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.
சொத்துகள் வாங்கும் யோகம்
பழைய சொத்துகளை விற்கும் அமைப்பு உள்ளது. புதிய சொத்துகளை வாங்குவீர்கள். ஒப்பந்தங்களில் படித்துப் பார்த்து கையெழுத்து போடுவது நல்லது. தாய்க்கு சிறு சிறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். நெஞ்சக நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சாப்பிடும் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கொழுப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நீரால் தொற்றுகள் ஏற்படும் அபாயம் ஏற்படும்.
உணவில் கவனம்
வெளிஉணவுகளைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய் ராசியில் இருப்பதால் பூர்வீக சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். சகோதரரால் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரப் பதவி கிடைக்கும். உயர்கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படும். 8க்கு உரியவன் 6 இல் அமருவதால் விபரீத ராஜயோகம் ஏற்படும். எத்தனை தடைகள் வந்தாலும் அது வெற்றியாக மாறும்.
வெளிநாட்டு வாய்ப்பு
7 இல் குரு இருப்பதால் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். சர்க்கரை தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. 7க்கு உரிய புதன் ராசியில் இருப்பதால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.
திடீர் வேலைவாய்ப்பு
ஒரு சிலருக்கு உடல்நலனில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் பலருக்கு திடீர் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். சூரியன் ராசியில் அமர்வதால் பூர்வீக சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டு. அரசியல்வாதிகள் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வுகள், இடமாற்றம் கிடைக்கும். இழந்த சொத்துகள் மீண்டும் கிடைக்கும். கெளரவம், அந்தஸ்து, தைரியம் கூடும். பரமக்குடி நயினார் கோயில் நாகநாத சுவாமிகள் வழிபாடு ஏராளமான வெற்றியை அள்ளிக் கொடுக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications