ஜூலை மாத பலன்: மேஷ ராசிக்கு குருவின் அருளால் அதிர்ஷ்டம்.. சிக்கனத்தை கடைப்பிடிப்பது ரொம்ப அவசியம்
ஜூலை மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குரு, சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதன், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவான் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் கன்னி ராசிக்கும் வருகிறார்.
அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷ ராசி பலன்
மேஷ ராசிக்காரர்களுக்கு இரண்டாவது ஸ்தானத்துக்கு அதிபதி சுக்கிரன். சுக்கிரன் இந்த மாதத்தில் ஜூலை 26 ஆம் தேதி வரை ரிஷப ராசியில் ஆட்சியாக இருப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவி சொல்லே மந்திரம் எனும் வாழும் காலகட்டமாக இருக்கும். பிறரால் வஞ்சிக்கப்பட்டாலும் உங்களுக்கு மனைவி பக்க பலமாக இருப்பார். 3 ஆம் இடத்துக்கு அதிபதியான புதன் பகவானால் குடியிருக்கும் இடங்களில் அக்கம்பக்கத்தினரால் சிறு மனக் குழப்பங்கள் ஏற்படும்.
உத்தியோகம்
இந்த மாதத்தின் 17 ஆம் தேதி புதன் மீண்டும் மிதுன ராசிக்குள் வருவதால் அக்கம்பக்கத்தினரின் உறவுநிலைகள் நன்றாக இருக்கும். நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். அல்லது அக்கம்பக்கத்தினரே உங்களை அனுசரித்துச் செல்லும் நிலை உண்டாகும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் அற்புதமான நண்பர்களாக இருப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
குருவின் அருள்
குரு பகவானின் அனுக்கிரகம் இப்போது அருமையாக உள்ளது. பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். கல்வியில் நல்ல வளர்ச்சி கிடைக்கும். மூத்த குடிமகன்களுக்கு 3 ஆம் இடத்தில் குரு பகவான் இருக்கும்போது பிள்ளைகள் சப்போர்ட்டாக இருப்பார்கள். ஆனால் பெரியவர்கள் மனக் குழப்பத்திலேயே இருப்பீர்கள். மேஷ ராசிக்காரர்களின் வீட்டில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கான நல்ல செய்திகள் சீக்கிரமே வந்து சேரும்.
சிக்கனம் அவசியம்
12 ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சிக்குப் பின்னர் நல்ல வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலக அளவில் பணப் பிரச்சனை இருப்பதால் நம் நாட்டிலும் பணம் சார்ந்த விஷயங்களில் உள்ளது. அதனால் இந்த மாதத்தைப் பொருத்தவரை சிக்கனமாக சேமித்து செயல்படுவது நல்லது. 6 ஆம் இடத்தில் இருக்கும் கேது விலகி 5 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஜூலை 29 ஆம் தேதி செவ்வாய் பகவான் 6 ஆம் இடத்துக்குச் செல்கிறார். மாதக் கடைசியில் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம், படிப்பு
வயிறு உபாதைகள், செரிமானப் பிரச்சனை, நெஞ்சகத்தில் வாயு பிரச்சனை, கண் தொடர்பான பிரச்சனைகள் என சிறிய சிறிய பிரச்சனைகள் வந்து போவதற்கான வாய்ப்புள்ளது. மாணவர்களைப் பொருத்தவரை 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சோஷியல் மீடியாக்களில் இளைஞர்களுக்கு அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். இதனால் படிப்பில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு மாதத்தின் இரண்டாம் பகுதியில் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
கலைத் துறையினர்
சுக்கிர பகவான் 2 ம் இடத்திலும், ராகு பகவான் லாபத்திலும் இருப்பதால் திரைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். ஜூலை 17 ஆம் தேதிக்குப் பிறகு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கான வாய்ப்புள்ளது. நாடகத் துறை, கலைஞர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
பரிகாரம்
கர்ப்பிணிப் பெண்கள், செய்தொழில் செய்பவர்களுக்கு சிறு சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மலைக்கு மேல் இருக்கும் முருகனை வழிபடுவது நன்மையைத் தரும். முருகப் பெருமானுக்கு பால் காவடி எடுத்து வழிபடுவது அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications