மகர ராசிக்கு சுக்கிரன் அருளால் சூப்பர் யோகம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. ஒரே குஷிதான்
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் மகர ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகர ராசி பலன்
மகர ராசிக்காரர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். 6, 8, 12 ஆகிய 3 இடங்களும் இயங்கினால் விபரீத ராஜயோகம் உண்டாகும். மகத்தான மாதமாக உங்களுக்கு இருக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். பணம், மனம் ரீதியாக பட்ட அனைத்து கஷ்டங்களில் இருந்தும் விடுதலைப் பெறப் போகிறீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஜூலை 24 ஆம் தேதி வரை சுக்கிரன் தனது சொந்த வீட்டிலேயே இருப்பதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பயணங்கள்
சுக்கிரன் 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் லாபம் கிடைக்கும். அதிக அளவிலான பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஜூலை 15க்குப் பிறகு சூரியன் கடகத்துக்குச் சென்று 7 ஆம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, தைரியம் அனைத்தும் கிடைக்கும். உத்வேகம் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
தொழில்
தொழில் முனைவோராக மாறக்கூடிய யோகம் உள்ளது. கூடுதல் வருமானம் பெறுவதற்கான வேலைகளைச் செய்வீர்கள். அரசு சார்ந்த எல்லா விதமான காரியத் தடைகளும் உங்களுக்கு நீங்கும். 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். கைவிட்டு போன விஷயங்கள் அனைத்தும் கிடைக்கும் யோகம் உண்டாகும்.
தைரியம்
உங்களைப் புரிந்துகொண்ட துணை கிடைப்பார்கள். புதிய வரவின் மூலமாக புத்துணர்ச்சி உண்டாகும். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ராசிநாதன் 3 இல் அமர்வதால் அபரிமிதமான தைரியம் உண்டாகும். உங்களை அவமானப்படுத்தியவர்கள் முன்பு வாழ்ந்து காட்டும் காலமாக இருக்கும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சனி தசைக்குள் நுழைவதால் புதிய தொழில் தொடங்குவீர்கள்
அனுகூலம்
தொழில் தொடங்குவதற்கான கடன்கள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம், அனுகூலம் ஏற்படும். நிறைய ஆன்மிக பயணங்களை மேற்கொள்வார்கள். மன ரீதியான திருப்தி உண்டாகும். உங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். காதல், கவிதை என கொட்டும். காதல் கைகூடும். வீடு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
ஆரோக்கியத்தில் கவனம்
வீட்டுக்குள் பிரச்சனை, ஆரோக்கிய குறைபாடு, பாதியில் நின்ற வீடு, அந்த வீட்டுக்கு செலவு என பல்வேறு கவலைகள் உங்கள் மனதில் எழும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது நிதானமாக செல்ல வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
கால பைரவர் வழிபாடு வாழ்க்கையில் ஏற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும். காளி கோயிலில் வழிபடுவது கவலைகள் அனைத்தையும் நீக்கும். மொத்தத்தில் இந்த ஜூலை மாதம் உங்களுக்கு மகத்தான மாதமாக அமையும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications