ஜூன் ராசி பலன்: விருச்சிக ராசிக்கு தொட்டதெல்லாம் ஜெயம்.. உத்தியோகம், எதிரிகளால் வரப்போகும் ஆபத்து
ஜூன் மாத பலன்: ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஏற்படக்கூடிய கிரக மாற்றங்கள், கோச்சாரங்களின் அடிப்படையில், விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் நிகழப் போகும் மாற்றங்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ஏழாம் இடத்தில் சூரியன் அமர்ந்து சனியின் பார்வையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கு கடும் வாக்குவாதம், சண்டை ஏற்பட்டிருக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். மனைவி, கணவர், மாமனார், தந்தை, இரண்டாவது மகனின் உடலில் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கும். நீங்கள் பார்க்கும் அனைத்து மனிதர்களும் உங்களுக்கு கடந்த ஒன்றரை மாதமாக பிரச்சனையை கொடுத்திருக்கலாம்.

ஏற்றம்
தற்போது சூரியன் அஷ்டம ஸ்தானத்துக்கு சூரியன் மாறுவதால் மிகப்பெரிய ஏற்றத்தை உண்டாக்கும். அஷ்டம ஸ்தானத்துக்கு சூரியன் சென்றாலும் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. சனியின் பார்வையில் சூரியன் இல்லாதது ஒரு நன்மை என்றாலும், திரிகோணத்தில் ராகு அமர்ந்துள்ளதால் முடிந்த அளவுக்கு உங்கள் மேலதிகாரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வது நல்லது.
கவனம்
சூரியன் குரு புதன் இணைந்திருப்பதால் முதுகுத் தண்டுவடம், கால் முட்டியில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. பத்தாம் இடத்தில் செவ்வாயும், கேதுவும் சேர்ந்து ராகுவின் பார்வையில் அமர்ந்துள்ளது. அதனால், ஜூலை 2 ஆம் தேதி வரை வேலையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்
யாரை எல்லாம் நீங்கள் எதிர்த்தீர்களோ, சண்டை போட்டீர்களோ அத்தனை பேரும் உங்களுக்கு எதிராக மாறுவார்கள். வேலையில் சர்ச்சை, போலீஸ் வழக்கு, தொடையில் காயம் ஏற்படுவது, கட்டி வருவது, மாமியார் ஆரோக்கியத்தில் பிரச்சனை, அறுவை சிகிச்சை செய்து கொள்வது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வெற்றி, லாபம்
பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர்ந்திருப்பதால் குழந்தை பிராப்தம் உண்டாகும். நிறைய பேருக்கு மன உறுதி அதிகரிக்கும். நினைத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். அஷ்டமத்தில் புதன் அமர்ந்திருந்தாலும் மறைபொருள் ரகசியத்தை தெரிந்து கொள்வீர்கள். நிறைய பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.
மதிப்பெண்
மகிழ்ச்சி ரீசியாக 100க்கு 75 சதவீதமும், பொருளாதார ரீதியாக 100க்கு 90 சதவீதமும் நன்மையைப் பெறவீர்கள். சுயம்பு லிங்கேஸ்வரர் வழிபாடு உங்களுக்கு அற்புதமான மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications