Kadagam Rasi Palan: கடக ராசிக்கு கொட்டி கொடுக்கும் சுக்கிரன்.. கோடீஸ்வர யோகம்
சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன் 14.09.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் கடக ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.

கடகம்
கடகம் ராசிக்கு சுக்கிரன் உங்கள் சொந்த ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். இதுவரை உங்களின் விரய ஸ்தானமான 12 ஆம் இடத்தில் இருந்த சுக்கிரன், தற்போது உங்கள் ராசிக்குள் வந்திருப்பது அற்புதமான அமைப்பு. சுக்கிரன் உங்களின் நான்காம் இடமான சுக ஸ்தானம் மற்றும் லாபத்திற்கு அதிபதி. இதனால் கடந்த கால துன்பங்கள் விலகி சுக பலன்கள் அதிகளவு கிடைக்கும்.
சொந்த வீடு கனவு
உத்யோகம், தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். லாபத்தை பற்றிய தெளிவான திட்டமிடல்களை வகுப்பீர்கள். உங்களின் புத்தி கூர்மையடையும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். சொந்த வீடு கனவு அதிகரிக்கும். வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வீடு இருப்போர் நீண்ட காலமாக திட்டமிட்ட புனரமைப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தபடியான கார், பைக் வாங்குவீர்கள்.
தடை அதை உடை
சுக்கிரன், புதனுடன் இணைந்துள்ளார். பயணங்கள் அதிகரிக்கும். சிலர் திடீர் வெளி மாநிலம், வெளி நாடு பயணிப்பதற்கான வாய்ப்புள்ளது. பயணத்தால் ஆதாயம் உண்டு. ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு இந்த காலம் அற்புதமாக இருக்கும். அஷ்டம சனியால் ஏராளமான பிரச்சனைகளை அனுபவித்து, இப்போதுதான் வெளியில் வந்துள்ளீர்கள். கடந்த காலங்களில் தடைபட்ட பலன்கள் அணுகூலமாகும்.
வெற்றிகள்
பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். அம்மா மீதான அக்கறை அதிகரிக்கும். அவர் மூலம் அதிகளவு ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பீர்கள். சுப காரிய தடைகள் விலகும். திருமண தடை இருப்போருக்கு, அது விலகி நல்ல செய்தி வீடு தேடி வரும். பிரிந்த கணவன் - மனைவி இணைவார்கள். மூன்றாம் அதிபதி நட்சத்திர ஸ்தானத்தில் பயணிக்கிறார். இதனால் உங்களின் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
இன்ப அதிர்ச்சி
குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். உத்யோகம், தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகம், தொழிலில் இழுபறியாக இருந்த விஷயங்கள் நல்லபடியாக நடைபெறும். முதலீடுளில் லாபம் அதிகரிக்கும். முக்கியமாக பங்குச்சந்தை லாபம் இந்த காலத்தில் சிறப்பானதாக இருக்கும். அஷ்டம சனியால் அவதிப்பட்ட உங்களுக்கு இந்த காலம் இன்ப அதிர்ச்சியாக பல நற் பலன்களை கொடுக்கும்.
பரிகாரம்
கடன் சுமை குறையும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். தொழிலில் புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்யோகம், தொழிலில் மாற்றங்கள் நிகழும். வெளிநாட்டு வேலை அமைவதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. வம்பு, வழக்குகள், நிலம் சார்ந்த பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். சுக்கிரன் சம்பந்தப்பட்ட தலங்கள் அல்லது அத்தீஸ்வரர் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்களை கொடுக்கும்.
-
7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம்












Click it and Unblock the Notifications