Rasi Palan This Week: கடக ராசிக்கு நிலத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இப்போது நல்லது நடக்கவில்லை எனில் எப்போது நடப்பது என்கிற நிலைமை உள்ளது. புரட்சி செய்து, சண்டை போட்டு காரியத்தை ஜெயிப்பீர்கள். நிறைய ரூல்ஸ்களை ஃபாலோ செய்து கொண்டிருப்பீர்கள். அவை எல்லாம் முடியும் காலகட்டம். பழைய விஷயங்கள், நட்புகள், கணக்குகள், உறவுகள், பழைய வேலைகள் எல்லாம் தேடி வரும் காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் வக்கிரமாக இருக்கும்போது, பொதுவாக குரு இருக்கும்போது கண்டிப்பாக நிறைய பேருக்கு திருமண யோகம் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். இடமாற்றம் ஏற்படும். அரசியலில் பெரிய மாற்றங்கள் கடக ராசிக்காரர்களுக்கு உண்டு.
பேச்சில் கவனம்
தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால் பேசக்கூடாத விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. 4 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் வீடு அமையக் கூடிய பிராப்தம் உண்டாகும். நிறைய செளரியங்கள், மெத்தைகள் வாங்கும் யோகம் ஏற்படும். இரவு நேரத்தில் பயணம் செய்வதையும், கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டைகள் விஷயங்களிலும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி டாப் கிளாஸ் யோகம் உண்டாகும்.
நிலம் வாங்கும் யோகம்
நிலபுலன்கள் வாங்கும் யோகம் ஏற்படும். அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷமும், பொருளாதாரமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். குருவாயூர் கிருஷ்ணரை வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும். வயிறு, மன அழுத்தம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் சுபிக்ஷம் ஏற்படும். சுபவிரயங்கள் கைகொடுக்கும்.
ரிஸ்குகள்
எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். துணைவிக்கம், உங்களுக்கும் இருந்த மன வேற்றுமை நீங்கும். தைரியமாக நிறைய ரிஸ்குகளை எடுப்பீர்கள். பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும்.
சுபகாரியம்
தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனி டக்கு டக்கென்று நடக்கும். சிவன் வழிபாடு நல்ல நம்பிக்கையைத் தரும். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவதால் சிறு சிறு கடன்கள் வரும். ரத்தபந்த உறவுகள் விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications