கடக ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது.. வேலை, தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத கிரக நிலை

எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-during-the-month-of-aavani

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. புதிய தொழில், புதிய படிப்பு, புதிய உத்தியோகம், புதிய வியாபாரம் போன்றவற்றை தைரியமாக செய்யும் காலகட்டம். பிள்ளைகளின் அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். பிள்ளைகளின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

செல்வாக்கு

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் காணப்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். படிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில் அபிவிருத்தி ஏற்படும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு ஏற்படும். வியாபாரத்தில் காணப்பட்டு வந்த பிரச்சனைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.

தொழில் அனுகூலம்

தொழில் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். அனைத்து விதமான விஷயங்களும் இந்த மாதத்தில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் எல்லாம் இனி அடுத்தடுத்து நடக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும் அதி அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

வார்த்தைகளில் கவனம்

வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சிறிய கோபங்கள் கூட பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. 8 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் தேவையில்லாத மன சஞ்சலங்கள் ஏற்படும். ஆனால் நீங்கள் எது செய்தாலும் அது நன்மையில் தான் முடியும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை. ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.

ஆரோக்கியம், வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் காணப்படும். தொழில், வியாபாரம் ரீதியாக எடுக்கும் முடிகள் ஜெயத்தை ஏற்படுத்தும். காது, மூக்கு, தொண்டை, வயிறு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. துர்கை வழிபாடு உங்களுக்கு மிகுந்த ஏற்றத்தை தரும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+