Kadagam Rasi Palan: கடக ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. வாயில தான் கண்டமே
பிப்ரவரி மாத பலன்: புத்தாண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந் திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசியினர் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள். யார் என்ன பிரச்சனைகள் செய்தாலும், தடைகளைக் கொடுத்தாலும் உங்கள் அன்பை நீங்கள் எல்லோர் மீதும் காட்டிக் கொண்டே இருப்பீர்கள். பிப்ரவரி மாதத்தில் பெரிய சிறப்புகள் கொடுக்கும் மாதமாக இருக்கும். ராசிநாதன் சந்திர பகவான் ராசியில் ஆட்சியாக இருந்து மாதம் தொடங்கி, நிறைவடைகிறது. 7 ஆம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகியோர் இருப்பதால் வலுத்துள்ளது. இது அற்புதமான கிரக அமைப்பாகும்.
திருமண யோகம்
கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சுக்கிரன் சேர்ந்திருப்பதால் நிறைய கடக ராசியினருக்கு திருமண யோகம் உண்டாகும். இந்த திருமணம் மனம் ஒத்த தம்பதிகளாக வாழக்கூடிய யோகத்தைக் கொடுக்கும். சிலரது வாழ்க்கைத் துணைக்கு கட்டிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் களத்திர தோஷம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் முருகப் பெருமானுக்கு வாழைப்பூவினால் மாலை இடுவது ஏற்றத்தைக் கொடுக்கும்.
கவனம்
8 ஆம் இடத்தில் புதனும், ராகுவும் சேருவதால் கம்யூனிகேஷனில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் கருத்தைப் பதிவிடும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பேசக்கூடிய பேச்சால் பிரச்சனை வரும் என்பதால் யோசித்து, நிதானமாக செயல்படுவது நல்லது. கம்யூனிகேஷன் துறைகளில் இருப்பவர்களுக்கு வேலை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
முதலீடுகள்
நிறைய பணத்தை முதலீடு செய்யத் தொடங்குவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடுகளை அதிகப்படுத்துவீர்கள். பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உடம்பில் கால்சியம் தொடர்பான பிரச்சனை, மூட்டு வலி போன்றவை வரும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. கணவரோடு சிலருக்கு கருத்து மாறுபாடு வரும் என்பதால் கவனம் தேவை.
படிப்பு
படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் கவனச் சிதறல் ஏற்படும் என்பதால் கவனத்தோடு படிப்பது நல்லது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல புதிய பார்ட்னர் கிடைக்கும் யோகம் உண்டு. 2 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் வார்த்தைகளைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கும் சூழல் ஏற்படும். முன்கோபத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
வழிபாடு
நிறைய பணத்தை சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். சுப நிகழ்ச்சிகளில் நிறைய பங்கெடுப்பீர்கள். மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும். வசதியான வாழ்க்கை அமையக் கூடிய மாதமாக இருக்கும். சிலர் புதிய இரண்டு சக்கர வாகனம், கார் வாங்கும் யோகம் உண்டாகும். பழனி முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசிப்பது வெற்றியைத் தரும்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications