Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை சித்திரைத் திருவிழாவை, கைலாசாவில் இருந்து லைவ் ஆக தரிசித்த நித்யானந்தா: பக்தர்களுக்கு அன்னதானம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவை கைலாசாவில் இருந்து நித்யானந்தா நேரலை மூலம் தரிசித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: கைலாசா நாட்டில் வசிக்கும் நித்யானந்தா மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை நேரலையில் கண்டு ரசித்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

நானே பரமேசுவரனின் அவதாரம், மீனாட்சி அம்மனின் மறுபிறவி" என்று நித்யானந்தா அடிக்கடி குறிப்பிடுவார். அதனை நினைவுகூரும் வகையில் பக்தர்கள் மீனாட்சி அம்மனின் வடிவில் நித்யானந்தாவை ஸ்தாபித்து வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா அறிவிப்பு வெளியானது முதல் கைலாச நாட்டில் ஆன்மீக நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோலத்தில் நித்யானந்தா இருப்பது போன்ற படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

 மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

நித்யானந்தா ஆசிரமம்

நித்யானந்தா ஆசிரமம்

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள், கைலாசாவில் இருந்தவாரே நித்யானந்தா சித்திரை திருவிழாவை காண்பதற்கான நேரடி வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.

நேரலையில் தரிசித்த நித்யானந்தா

நேரலையில் தரிசித்த நித்யானந்தா

சித்திரை திருவிழாவை நேரலையில் காண்பதை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்படி நித்யானந்தா உத்தரவிட்டிருந்தார். அதன்படி பக்தர்கள் நேரலை செய்தனர். இதன் மூலம் நித்யானந்தா சித்திரை திருவிழாவை நேரலையில் கண்டுகளித்தனர். இதையடுத்து நித்யானந்தா உத்தரவுப்படி, ஆசிரமம் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் பிரசாதத்தை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

நித்யானந்தா இளைய மடாதிபதி

நித்யானந்தா இளைய மடாதிபதி

திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த நித்யானந்தா. தியான பீடம் மூலம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஆன்மீக சொற்பொழிவு சத்சங்கம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவருக்கு திரளான ஆதரவாளர்கள் உள்ளனர். மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழகத்தின் சைவ மடங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நித்யானந்தாவின் இளைய மடாதிபதி பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் "நான் வகித்து வரும் மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவி சட்டபூர்வமாக பாதிக்கப்படவில்லை. எனவே நானே மதுரை ஆதீனம் இளைய மடாதிபதி" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

மாயமான நித்யானந்தா

மாயமான நித்யானந்தா

நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்தன. அவர் வழக்கு விசாரணைக்காக பல்வேறு இடங்களுக்கும் அலைய வேண்டி வந்தது. இந்தநிலையில் நித்யானந்தா தனது நூற்றுக்கணக்கான சீடர்களோடு திடீரென மாயமானார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்தது. போலீசாரும் தேடி வந்தனர்.

கைலாசாவில் குடியேறிய நித்யானந்தா

கைலாசாவில் குடியேறிய நித்யானந்தா

இந்தநிலையில் நித்யானந்தா தொலைக்காட்சியில் தோன்றி, "நான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதிபராக உள்ளேன். அங்கு இருந்தபடி உலகம் முழுவதும் ஆன்மீக சொற்பொழிவு சத்சங்கம் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவேன்" என்று அறிவித்தார். அதன்படி இணையதள நேரலை வாயிலாக ஆன்மீக சொற்பொழிவு சத்சங்கம் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை ஆதீனம் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அப்போது "நானே மதுரையின் 293-வது மடாதிபதி என்று நித்யானந்தா அறிவித்து, கைலாசாவில் பதவி பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.

பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நித்யானந்தா

பக்தர்களுக்கு ஆசி வழங்கிய நித்யானந்தா

நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை. அவர் ஆதீன மடத்துக்குள் வந்தால் கைது செய்யப்படுவார் என்று மதுரை ஆதினத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் எச்சரித்திருந்தார். இதனையடுத்து சித்திரை திருவிழாவை நேரலையில் கண்டு ரசித்தார் நித்யானந்தா. சுவாமி அம்மன் சியாமளா பீடம் ஆசிரமம் சார்பில் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பட்டாடைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நித்யானந்தா நேரலை வாயிலாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை தரிசித்தார். அதன் பிறகு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+