Rasi Palan This Week: கன்னி ராசி கடல் கடந்து அடிக்கும் யோகம் – மிஸ் பண்ணிறாதீங்க
வார ராசி பலன்: அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 முதல் ஐப்பசி 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி
கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தினருக்கு இந்த வாரம் அதிகளவு நற்பலன்கள் கிடைக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் அற்புதமான மாற்றங்கள் நிகழும். பண வரவு திருப்தியாக இருக்கும். முதலீடுகளில் குறைவு இருக்காது. நீங்கள் எதிர்பாராதளவுக்கு லாபம் கொட்டும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வெளிநாடு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிக லாபம் ஏற்படும்.
நல்ல செய்தி
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். வாழ்க்கை துணையுடன் மோதல் நீங்கி காதல் கூடும். வாழ்க்கை துணையால் ஆதாயம் உண்டு. பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். சுப காரிய தடைகள் நிவர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் கூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதோருக்கு நிச்சயமாக நல்ல செய்தி தேடி வரும். இந்த நல்ல நேரத்தை தவறவிட்டு விட வேண்டாம். தொழிலில் இருந்த சிக்கல்கள் விலகும்.
வார்த்தைகளில் கவனம்
வார்த்தைகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கோபத்தை குறைத்து பொறுமையை கடைபிடிப்பது முக்கியம். கோபத்தை குறைக்காவிடின் பெரியளவுக்கு மன கஷ்டங்கள் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பிறர் குடும்ப பிரச்சனைகளில் உங்களின் தலையீடு இல்லாமல் இருப்பதும் அவசியம். எதிலும் நிதானம் அவசியம்.
பரிகாரம்
ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. காது, மூக்கு, தொண்டை, பல், கழுத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் வேண்டும். உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெருமாள் வழிபாடு நம்பிக்கையை கொடுக்கும். வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு தானம் செய்வது கூடுதல் நன்மையை கொடுக்கும்.
-
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications