Rasi Palan This Week: கால் மேல் கால் போட்டு அமரப்போகும் கன்னி ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது
Kanni Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். தொடர்ந்து இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. எல்லா விஷயங்களிலும் நன்மைகளும், அனுகூலங்களும் காணப்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் சிறிய பிரச்சனைகள் வந்தாலும் உரிய மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
தொட்டது துலங்கும்
பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அபிவிருத்தி ஏற்படும். கணவன், மனைவிக்குள் மற்றவர்களின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நாராயணியத்தில் 100 ஆவது பாடலை படிப்பது கேட்பது நன்மை பயக்கும். குருவாயூர் கிருஷ்ணரை தொடர்ந்து வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
குட்நியூஸ்
இதுவரை இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். தொடர்ந்து தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் இனி அடுத்தடுத்து நடக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். வேலை மாற்றம், இடமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் நல்ல காலகட்டம். இந்த வாரத்தின் இறுதிப் பகுதி உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.
கடன் தீரும்
சனியின் மேல் சந்திரன் பார்வை விழுவதால் பெண்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். கடன்களை எல்லாம் அடைத்து முடிப்பீர்கள். பகை, நோய்கள் எல்லாம் தீரும். பெரிய ஆட்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நன்மதிப்பு, விருது, பாராட்டு, புகழ் கிடைக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். ராஜ பதவிகள் கிடைக்கும் யோகம் உண்டு.
வழிபாடு
கன்னி ராசி அல்லது கன்னி ராசி ரத்த பந்தங்கள் இதயம், கொழுப்பு, முதுகு, பின்புறம் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவிற்கு எந்தவித குறைவும் இருக்காது. குருவாயூர் கிருஷ்ணர், முருகர் வழிபாடு நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications