Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு லாபத்தில் சுக்கிரன்.. கூரையைப் பிச்சுகிட்டு பணம் கொட்டும் யோகம்
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகத்தில் இருக்கும் 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கிரகங்களின் முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக இருக்கும். 11 ஆம் இடத்தில் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். 2, 9க்கு உடையவர் 11 ஆம் இடத்தில் இருப்பது பணத்தை சம்பாதிப்பதற்கான நல்ல அமைப்பாக இருக்கும். 10 ஆம் இடத்தில் குரு இருப்பது யோக பலன்களை கொடுக்கும். தொழில் முன்னேற்றங்கள் இருக்கும் நல்ல தன்மை உண்டாகும்.
யோக பலன்
புதன் ராசியில் உச்சமடைவதால் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். 15 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாய் 2 ஆம் இடத்துக்குப் போகிறார். கோபங்கள் அதிகளவில் வரும். வார்த்தைகளில் கடுஞ்சொல்லை பயன்படுத்துவீர்கள். 1 மாதத்திற்கு 2 இல் செவ்வாய் இருப்பதால் பிறர் மனம் கஷ்டப்படும் வகையில் பேசி விடுவீர்கள். அதனால், கோபத்தைக் கட்டுப்படுத்தி, பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
கோபம் வேண்டாம்
15 ஆம் தேதிக்குப் பிறகு ராசியில் சூரியன் வருவதால் அதிகளவிலான கோபம் ஏற்படும். சிலருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். கிழக்கு திசையில் இருந்து வரும் தகவல்கள் நன்றாக இருக்கும். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு படிப்பதற்கு, வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு விசா, அனுமதி கிடைக்கும்.
தைரியம்
எல்லா நிலைகளிலும் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எல்லா நிலைகளிலும் எதிரிகளை சமாளிக்கக் கூடிய யோகம் உண்டாகும். எந்தெந்த விஷயங்களில் எல்லாம் பயந்து கொண்டிருந்தீர்களோ அதில் இருந்து எல்லாம் வெளிவரக் கூடிய தன்மைகள் ஏற்படும். தைரியம் அதிகரிக்கும். புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் முன்னேற்றம் நன்றாக இருக்கும்.
புதிய வேலை
வேலையில் மாற்றம் நடந்தாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. இரண்டாவது கிடைக்கும் வேலை அற்புதமாக இருக்கும். சிலருக்கு கடன் வாங்கும் சூழல் உள்ளது. 6 ஆம் இடத்தை குரு, சுக்கிரன் பார்ப்பதால் நல்ல கடன் வாங்கக்கூடிய அமைப்பு உள்ளது. அந்நிய மதம், இனம், மொழி பேசக்கூடியவர் மூலமாக ஆதரவுகள், ஆதாயங்கள், பண வரவுகள் கிடைக்கும்.
வலிமை
6 ஆம் பாவம் உங்களுக்கு வலிமையாக இருப்பதால் அனைத்து விஷயங்களையும் சமாளிக்கக்கூடிய நல்ல மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும். ஏற்றமும், வளர்ச்சியும் கொடுக்கும் காலகட்டமாக அமையும். பண வரவிற்குப் பிரச்சனை இருக்காது. பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். வார்த்தைகளில் மட்டும் கவனம் தேவை. கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
-
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications