Rasi Palan This Week: கன்னி ராசிக்கு காத்திருக்கும் கண்டம்.. புதிய நட்பில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 18 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். ஆனால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகும். அலர்ஜி, தலைவலி, ஒற்றை தலைவலி, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொழில், வியாபாரம், படிப்பு போன்றவற்றில் நல்ல முன்னேற்றங்களைப் பெறுவீர்கள்.
கவனம்
குடும்பத்தில் அந்நியர் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்களும் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். பயணங்கள் சமயத்தில் ஆணாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்ணாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் அதீத கவனமாக இருக்க வேண்டும்.
கடன் தீரும்
பழைய கடன்கள் அனைத்தையும் முடிக்கும் எண்ணம் ஏற்படும். கடன்களை முடிப்பதற்கான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அற்புதமான காலகட்டமாக இருக்கும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.
நட்பில் எச்சரிக்கை
புதிய நட்பு, உறவுகள் எல்லாம் வரும். ஆனால் புதிய நட்பில் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக சொல்லி தேவையில்லாத வம்புகளில் மாட்டிக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. கன்னி ராசி பெண்கள் ஆண்கள் விஷயத்திலும், ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும்.
பரிகாரம், முதலீடு
வியாபாரத்தில் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். டிரேடிங், தேவையில்லாத லிங்குகளை ஓபன் செய்வது, பங்குச் சந்தை, முதலீடு தொடர்பான விஷயங்களில் அவசரப்பட்டு பெரிய பாதிப்புகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். நரசிம்மரின் மந்திரங்களை கேட்பது, நரசிம்மர் கோயிலுக்குச் சென்று வருவது எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும். மதிய வேளைகளில் சாப்பாடு மற்றும் எலுமிச்சை ஊறுகாயை தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications