மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கிய மாங்கனி திருவிழா..காரைக்காலில் கோலாகலம்

காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மக்கள் முன்னிலையில் வழக்கம் போல நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

காரைக்கால்: பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 11 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நாளை மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான முறையில் நடந்த விழா இந்த ஆண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. முன்னதாக, பரமதத்த செட்டியார் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து அலங்காரமாக ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக புறப்பட்டு காரைக்கால் அம்மையார் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மாங்கனி திருவிழா

மாங்கனி திருவிழா

இன்று காலை பரமதத்தர் புனிதவதியார் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாத்தி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 13ஆம் தேதி பிச்சாண்டவ மூர்த்தி மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

 பக்தர்கள் மாங்கனி இறைத்தல்

பக்தர்கள் மாங்கனி இறைத்தல்

அப்போது பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14ஆம் தேதி அதிகாலை அம்மையார் இறைவனுடன் ஜோதி வடிவத்தில் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

 இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விழா

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் விழா

விழா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவல் வாரியத்தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாங்கனி திருவிழா கோவில் பிரகாரத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால், பக்தர்கள் வேண்டுகோளை ஏற்று, மாங்கனி திருவிழாவை வழக்கம் போல், வெகு விமரிசையாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

 4 நாட்கள் நடக்கும் விழா

4 நாட்கள் நடக்கும் விழா

இவ்விழா, 4 நாட்கள் நடக்கும். பாதுகாப்பு பணிக்காக, காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் 500ஆகும் மேற்பட்ட போலீசார் ஈடுபடவுள்ளனர். 60 சி.சி.டி.வி. கேமரா வைத்துள்ளோம். முக்கியமாக, மாங்கனி இறைப்பின் போது, அர்ச்சனை செய்ய வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் தட்டுகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்யவேண்டுகிறோம். முடியாதவர்களுக்காக, நாங்கள் மூங்கில் தட்டுகளை தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்படி, பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்கவேண்டும். பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்றும் விழா குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+