Karthigai Matha Palan: அஷ்டம சனி அவ்வளவு தான் - சிம்ம ராசிக்கு இனி செம அதிர்ஷ்டம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் சிம்ம ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

யோகங்கள்
சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்
சிம்மம் ராசியினருக்கு உங்கள் ராசி அதிபதி சூரியன் நான்காம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். அஷ்டம சனி, ராசிக்குள் கேது இருப்பது ஆகியவற்றை கடந்து மனம் நிம்மதி அடையும். மனதில் தேவையில்லாமல் இருந்த வேதனைகள், அழுத்தங்கள், குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து மனம் மகிழ்ச்சியடையும். பெருமாள் பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
முயற்சிகள்
உங்களின் உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகி ஆரோக்கியம் மேம்படும். அதேபோல உங்கள் அம்மாவின் ஆரோக்கியமும் முன்னேற்றமடையும். பூர்விக சொத்து நிலம், வீடு வாங்குவதில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நிலம், வீடு, வண்டி வாகனம் உள்ளிட்ட சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும்.
பொருளாதாரம்
புதன் பகவான் 20 ஆம் தேதிக்கு முன்பு 3 ஆம் வீட்டிலும், அதன் பிறகு 4 ஆம் வீட்டிலும் பயணிக்க போகிறார். முயற்சி ஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் முயற்சிகளில் எல்லாம் முன்னேற்றம், வெற்றி கிடைக்கும். வருவாய் பெருகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இந்த மாதம் முழுவதுமே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பழைய பாக்கி வசூலாகும்.
பதவி உயர்வு
குடும்பத்தில் இருந்துவரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். சுக்கிரன் 3 ஆம் இடத்தில் ஆட்சி பலத்துடன் இருப்பதால் தொழில் அற்புதமாக இருக்கும். உத்யோகத்தில் மேன்மை இருக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட தடைபட்ட அங்கீகாரங்கள் கிடைக்கும். வியாபாரமும் செழிப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் சரியாகும்.
அதிர்ஷ்டம்
செவ்வாய் பகவான் ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆவதால் குழந்தைகள் விஷயத்தில் இருந்த கவலைகள் தீரும். திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். 11 ஆம் இடத்திற்கு குரு வருவதால் உங்களின் தீராத ஆசைகள் நிறைவடையும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த மாதம் நல்ல தகவல் கிடைக்கும். கடன் சுமை குறையும்.












Click it and Unblock the Notifications