Viruchigam Rasi Palan: 4 கிரகங்களால் அதிர்ஷ்டத்தை அள்ளும் விருச்சிக ராசி.. ராஜா மாதிரி வாழப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் விருச்சிக ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.

ஐப்பசி மாதம் நிறைவடைந்து கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது (நவம்பர் 15 - டிசம்பர் 15) குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்துடன் வக்கிரமாக உள்ளார். அவர் 19 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கேயும் அவர் வக்ர கதியில் தான் இருக்க போகிறார். சுக்கிரன் 10 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் 21 ஆம் தேதி தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

karthigai-matha-rasi-palan-what-kind-of-benefits-will-get-viruchigam-rasi-people-during-this-period

யோகங்கள்

சுக்கிரன், செவ்வாய் இருவரும் தங்களின் ஆட்சி பலத்தை விட்டு பெயர்ச்சி ஆகிறார்கள். சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார். புதன் பகவான் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் 12 ஆம் தேதி வக்ர நிவர்த்தி ஆகிறார். சுக்கிரன் - புதன் சேர்க்கை மதன ராஜ கோபால யோகத்தை கொடுக்கும். சூரியன் - செவ்வாய் இணைவை மகா யோகம் என்பார்கள்.

சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையால் பிருகு மங்கல யோகம் உருவாகிறது. சுக்கிரன் - சூரியன் சேர்க்கையால் சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது. இப்படி கார்த்திகை மாதம் முழுவதும் பல அற்புத யோகங்கள் உள்ளன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் விருச்சிக ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்று பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு அருமையான மாதமாக இந்த மாதம் இருக்கும். உங்கள் ராசியாதிபதி உங்கள் ராசிக்குள்ளே 20 ஆம் தேதி வரை இருக்கிறார். அதற்குப் பிறகு 2 ஆம் இடத்துக்கு போகிறார். குருவும் 19 ஆம் தேதிக்குப் பிறகு மேலே சென்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் நல்ல பண வரவு உண்டாகும். செழிப்பான மாதமாக இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

நகை வாங்கும் யோகம்

வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பேச்சால், மனதால் வேதனைப்பட்டு இருந்தாலும் இனி அந்த நிலைமை அனைத்தும் சரியாகும். அடமானத்தில் இருந்த நகைகளை மீட்கும் யோகம் ஏற்படும். நகை எடுக்கும் வாய்ப்பு ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

இரட்டிப்பு லாபம்

சனி ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் வரும் 12 ஆம் தேதிக்குள் ஆரோக்கியம் சார்ந்த விஷயம், வீடு, மனை, சொத்து சார்ந்த விஷயங்களை செய்து கொள்வது நல்லது. வக்கிரமாக இல்லையெனில் 12 ஆம் தேதிக்குள் இவை எல்லாம் அமைந்து வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். குரு பகவான் 2, 5க்கு உடையவராகி மீண்டும் 8க்கு வருவதால் இரண்டு மடங்கு லாபங்கள், 2 மடங்கு பண வரவு ஏற்படும்.

சுக்கிரனால் யோகம்

இரண்டாவது குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு, ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். 10 ஆம் தேதி வரை 12 ஆம் இடத்தில் இருந்து சுக்கிரன் வெளியூர் வெளிநாடு பயணங்களைக் கொடுத்திருப்பார். சுக்கிரனும் ராசிக்குள் வந்து தனது சொந்த வீடான 7 ஆம் வீட்டை பார்க்கும்போது அழகாக மாறுவீர்கள். விருச்சிகத்துக்குள் சுக்கிரன் வரும்போது தெய்வ கடாட்சம் ஏற்படும்.

திருமண யோகம்

திருமணம் சார்ந்த விஷயங்கள் கைகூடி வரும். எதிர்பார்த்த வரன் வரும். திருமண யோகம் ஏற்படும். வெளிநாடு, வெளியூர் பயணங்கள் ஏற்படும். நண்பர்களுடன் வெளியூர் செல்லும் யோகம் உண்டு. ராசிக்குள் 4 கிரகங்கள் வருகிறது. விபரீத ராஜயோகம் ஏற்படும். திடீர் பண வரவு, திடீர் அதிர்ஷ்டங்கள், மறைமுகப் பணம் போன்றவை கிடைக்கும். லாபம் 20 ஆம் தேதிக்கு மேல் அபரிமிதமாக இருக்கும்.

ஜெயம்

நீங்கள் செய்த தொழில், முயற்சிக்கான பலனை அனுபவிப்பீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயிக்கும் யோகம் ஏற்படும். சூரியன் ராசிக்கு வருவதால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சூப்பரான காலகட்டமாக இருக்கும். உங்கள் மீது மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உயர் பதவிகள் கிடைக்கும். இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். குழந்தைகள் விஷயத்தில் மட்டும் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+