Rasi Palan This Week: கும்ப ராசிக்கு அடித்து தூள் கிளப்பும் யோகம்.. புதிய உறவுகளிடம் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: ஆகஸ்ட் 26 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி 9 முதல் ஆவணி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 26 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் காணப்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். நண்பர்களுக்குள் இருந்த மன வருத்தங்கள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். துணையின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த பாதிப்புகள் நிவர்த்தி ஆகும்.
பிறர் தலையீடு
குடும்பத்தில் உறவினர்கள், நண்பர்கள் என யார் ஆலோசனை கூறினாலும் அவற்றைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் பிறரின் தலையீடு, உறவினர் தலையீடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய குடும்ப விஷயங்களை குடும்பத்துக்குள் வைத்துக் கொள்வது, பிரச்சனைகளை நான்கு சுவற்றுக்குள் வைத்துக் கொள்வது நன்மையைத் தரும்.
எச்சரிக்கை
கூடா நட்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. புதிய அறிமுகங்களை நம்பி பொறுப்புகளை கொடுப்பது பெரிய சிக்கலையும், பாதிப்புகளையும் ஏற்படுத்தும். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பயணங்கள் வந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது ஏற்றத்தை தரும்.
அனுகூலம்
வியாபாரத்தில் இருந்து பாதிப்புகள் எல்லாம் நீங்கும் காலகட்டம். உத்தியோக்தில் நல்ல அனுகூலங்கள் காணப்படும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஏற்றமும், அனுகூலத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். பூமி தொடர்பான விஷத்தில் இருந்த சிக்கல்கள், தடைகள் தீரும். இதுவரை இருந்து வந்த சங்கடங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.
யோகம்
உத்தியோகம், வியாபாரம், தொழில், வேலை, படிப்பு என அனைத்து விஷயங்களிலும் எல்லா நல்ல பலன்களும் கிடைக்கும் காலகட்டம். ஆரோக்கியத்திலும், புதிய அறிமுகங்களிடமும் கவனமாக இருப்பது மிகவும் நன்மை பயக்கும். பண வரவுகளுக்குப் பிரச்சனை இருக்காது. பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். நிலம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும்.
ஆரோக்கியம், வழிபாடு
வயிறு சம்பந்தப்பட்ட, துணை சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிவன் மற்றும் பார்வதி தேவி வழிபாடு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொடுக்கும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications