Rasi Palan This Week: கும்ப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. இதில் மட்டும் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் கோபப்படுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. பெற்றோர், பெரியவர்களின் தேக ஆரோக்கியத்தை மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. வயிறு, கழுத்து, ரத்த அழுத்தம், கை, கால் வலி போன்ற பாதிப்புகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.
அனுகூலம்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். ஆயில் புல்லிங் செய்வது மன அழுத்தம், மன சோர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. ஐப்பசி மாதம் முடிந்ததும் பெரிய அளவுக்கு அனுகூலம் ஏற்படும். அதுவரை தான் உண்டு, தன் வேலை உண்டு, தன் குடும்பம் உண்டு என்று சுருங்கிக் கொள்வது நல்லது. யோக பலன்கள் அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம்.
முன்னேற்றம்
உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் இனிமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது. வரும் 16 ஆம் தேதிக்குப் பிறகு நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். பிறருடைய விஷயத்தில் நீங்கள் தலையிடுவதையும், உங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
விநாயகர், துர்க்கை வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தி தரும். வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவு அளிப்பது தேவையில்லாத பழி பாவங்கள், மன அழுத்தம் தீரக்கூடிய அமைப்பு ஏற்படும். கோளார் பதிகத்தை சொல்வது, கேட்பதன் மூலமாக நம்பிக்கையும், சந்தோஷமும் ஏற்படும். விநாயாகர், சிவன், துர்க்கையை சரணடைவது கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications