மீனம் ராசிக்காரங்க ஆட்டம் இனி தான் ஆரம்பம்!.. எல்லா அதிர்ஷ்டமும் தேடி வரப்போகுது

Subscribe to Oneindia Tamil

Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் மீனம் ராசிக்கு என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அழகு, செளந்தர்யம், சந்தோஷம், காதல் போன்ற மகிழ்ச்சி தரக்கூடிய கிரகம் சுக்கிரம். இந்த சுக்கிர பகவான் செப்டம்பர் 4 ஆம் தேதி துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். மூல திரிகோணத்தில் இருக்கும் புதன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கு, துலாம், புதன் இரு கிரகங்களும் சஞ்சாரம் செய்து டிசம்பர் 6 ஆம் தேதி வரை அமர்ந்து யோகத்தை தரப் போகின்றன.

lakshmi-narayana-yogam-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-for-66-days

புதனும், சுக்கிரனும் இணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்குவதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பண வரவு உண்டாகும், திருமண யோகம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பெண்களுக்கு இந்த 66 நாட்கள் அற்புதமாக இருககும். துலாம், சிம்மம், கும்ப ராசிக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். தனுசு, ரிஷபம், சிம்ம ராசிக்கு பதவி உயர்வுகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பொருளாதாரத்தில் 5 மடங்கு உயர்வு ஏற்படும்.

அந்த வகையில், இந்த லட்சுமி நரசிம்ம யோகத்தால் மீனம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நல்ல பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

மீனம்

லட்சுமி நாராயண யோகத்தை முழுமையாக அனுபவிக்கும் யோகம் மீனம் ராசியினருக்கு ஏற்படும். பண வரவு அற்புதமாக இருக்கும். பிரிந்து போன குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் சேர்வார்கள். குடும்ப உறுப்பினர்களில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். அஷ்டமத்தில் சுக்கிரன், புதன் சேர்வதால் கர்ப்பப்பை, அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை.

திடீர் அதிர்ஷ்டம்

ஆண்கள் உறவு முறைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. செக்யூரிட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. எதிர்பாராத பண வரவு உண்டாகும். எதிர்பாராத சம்பளம், காப்பீடு போன்றவை கிடைக்கும். எதிர்பாராத திடீர் பண வரவு ஏற்படும். எதிர்பார்க்காத அதிர்ஷ்டங்கள் நிறையும் யோகம் . புதன் சுக்கிரன் சேர்வதால் கணவன், மனைவிக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஆரோக்கியம்

மீன ராசி கணவர்கள் மனைவியின் ஒழுக்கத்தையும், மனைவியாக இருந்தால் கணவரின் நடத்தையையும் பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்த 4 மாதங்களுக்கு சிறிது கவனமாக இருப்பது நல்லது. 7 ஆம் இடத்திற்கு நேரடியாக சூரியன் வருவதால் கணவரின் தலைப் பகுதி, மனைவியின் தலைப் பகுதி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, வயிறு உபாதைகள் தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருப்பது நல்லது.

கவனம்

உறவு முறையில் இருப்பவர்கள் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கபாலீஸ்வரரை வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். அடுத்த நான்கு மாதமும் நிறைய பயணங்கள் மேற்கொள்வது, கடினமாக உழைப்பது போன்ற நிலை ஏற்படும். பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் வருவதால் 10 மடங்கு உயர்வு ஏற்படும்.

அதிர்ஷ்டம் கொட்டும்

டிசம்பர் மாதத்திற்குப் பிறகு வாழ்க்கை அற்புதமாக இருக்கும். வேலை அதிகளவில் இருக்கும். வீட்டிற்கு உறவினர்கள் நிறைய பேர் வந்து செல்வார்கள். ரத்த சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. தசை பிடிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. திருமணம் நடக்கும். வேலை நன்றாக இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஒரு மாதத்திற்கு எதிரிகள் தொல்லை இருக்கும். அதன் பிறகு விலகும். புதிய உறவுகளால் பெயர் கெடும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+