Magaram Rasi Palan: சிகரத்தில் ஏறப்போகும் மகரம்.. இந்த வாரத்தில் நடக்கப்போகும் சூப்பர் மாற்றம்
வார ராசி பலன்: ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை, பங்குனி 23 ஆம் தேதி முதல் பங்குனி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு நிறைய லாபங்கள் ஏற்படும் நல்ல காலகட்டம். வண்டிகளில் செல்லும்போது விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும். லாபம் உண்டாகும். பாசிட்டிவான அமைப்பு உண்டாகும். தொழில் தொடங்குவதற்கான அமைப்பு நல்லது. தொழிலை மாற்றுவது, ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் புது தொழிலை தொடங்கும் அமைப்புண்டு.
அரசியலில் இருப்பவர்களுக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும். கெளரவம் உண்டாகும். விரயங்கள் எல்லாம் சுபவிரயமாக மாறும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தீரும். தொழில் ரீதியாக இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சங்கடங்கள் நீங்கும்
உத்தியோகத்தில் இருந்து வந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். விஷ ஜந்துக்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வண்டிகளில் செல்லும்போது கவனம் தேவை. உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது. தேவையில்லாத பொருள்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அசைவம் சாப்பிடும் மகர ராசியினர் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
ப்ரோமோஷன்
பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரம் உங்களிடம் வருவதற்கான வாய்ப்புள்ளது. நம்பிக்கை உத்வேகம் உண்டாகும். தொழில் ஏற்றம், உத்தியோக ஏற்றம் உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். கழுத்து, கை பகுதி, நரம்புகள் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனம் தேவை.
வெற்றி மேல் வெற்றி
கம்யூனிகேஷன் தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மாமனாரின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். 4 இல் சுக்கிரன், 6 இல் இருக்கும் குருவுக்கு சந்திரன் பார்வை கிடைப்பதால் எடுத்த காரியங்களில் ஜெயத்தையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாக ஆரம்பிக்கும்.
சாதகம்
திட்டமிட்ட காரியங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக நடக்கும். அதிர்ஷ்டம் ஏற்படும். ஒரு விஷயத்தை முடிக்க ஒருமுறைக்கு, இருமுறை முயற்சி செய்ய வேண்டியதிருக்கும். பொறுமையாக செய்வது நல்லது. தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்து லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும். சந்தோஷம் 65 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 85 சதவீதமும் நன்றாக இருக்கும்.
வழிபாடு
படபடப்பு, பதட்டம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, தலைவலி போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மகர ராசியினருக்கு நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிரன் வழிபாடு, பெருமாள் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். விஷ்ணு காயத்ரி நாமத்தைக் கேட்பது, சொல்வது நன்மை பயக்கும்.
-
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்











Click it and Unblock the Notifications