For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்த்திகை அமாவாசை முதல் தை அமாவாசை வரை ராகு,கேது தோஷம் நீக்கும் பிரம்மாண்ட யாகம்

உலக நலன் வேண்டி தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ராகு,கேது தோஷம் நீக்கும் மஹா ப்ரத்யங்கிரா சூலினிதுர்கா ஹோமம் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

வேலூர்: கார்த்திகை அமாவாசை 4.12.2021 சனிக்கிழமை முதல் 1.2.2022 தை அமாவாசை செவ்வாய்க்கிழமை வரை வாலாஜா தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் உலக நலன் வேண்டி ராகு,கேது தோஷம் நீக்கும் மஹா ப்ரத்யங்கிரா சூலினிதுர்கா ஹோமம் நடைபெற உள்ளது.

600 கிலோ மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்களுடன் 6000 தட்டு மிளகாய் வற்றல் கொண்டு அதி பிரம்மாண்ட
அதி அற்புதமான வகையில் மஹா ப்ரத்யங்கிரா,மகாகாளி,மகாவாராஹி,சூலினிதுர்கா,சரபேஸ்வரர்,மகா காலபைரவர் போன்ற ஆறு ஹோமங்கள் உலக நலன் வேண்டி நடைபெறுகிறது.

Maha Pradyangira Sulinidurga Homam - 60 Days of Great Sacrifice

அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள், தேவியின் கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால்,அன்னை ப்ரத்யங்கிராதேவி திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரீகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள்.

எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளியான ப்ரத்யங்கிரா தேவியின் அருள் அவசியம் என்று வேத சூட்சுமம் கூறுகிறது. மன்னர்களும் கூடி வழிவழியாக அன்னையை ஆராதித்து வணங்கினார்கள். சோழர்கள் காலத்தில் ப்ரத்யங்கிரா தேவிக்கு நிறைய கோயில்கள் இருந்திருக்கின்றன. "சம்பவாமி யுகே யுகே" என்ற தத்துவப்படி, குரோதமும் வன்முறையும் துரோகமும் நிறைந்த இந்தக் கலியூகத்தில், நல்லவர்களின் பக்கத்தில் துணையிருக்க
வேண்டிய அத்தியாவசியத்தின் காரணமாக, நமது நன்மைக்காக, உலக க்ஷேமத்துக்காக ப்ரத்யங்கிராதேவி கருணையுடன் அவளாகவே இப்போது ஈர்க்கிறாள். நம்மை ஏந்தி அள்ளிக்கொள்ளத் தயாராகக் காத்திருக்கிறாள்.

ஓர் அடி அவளை நோக்கித் தவழ்ந்தால் போதும். ஓடோடிவந்து எடுத்துக்கொள்ளும் தாய், தயாபரி அவள்.
இத்தனை சிறப் வாய்ந்த அன்னை ப்ரத்யங்கிராதேவிக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் 8 அடி உயரத்தில் விக்ரஹம் அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடத்தி வருகிறார்.

சுற்றுப்புறச் சூழலினால் ஏற்படும் நோய்கள் மற்றும் தீங்குகள் அகலவும், பஞ்சபூதங்களினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், சுற்றுபுற நகர, கிராம மக்கள் நலன் கருதியும், அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து ஆரோக்ய வாழ்வு வாழவும், நவகிரக தோஷங்கள், கோ சாபங்கள், சுமங்கலி சாபம் போன்ற பல வகையான சாபங்கள் நீங்கவும் இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

8 அடி விட்டமும், 12 அடி ஆழமும் உள்ள ஹோமகுண்டத்தில் உலகில் இதுவரை எங்கும் நடந்திராத வகையில் கார்த்திகை அமாவாசை முதல் தை அமாவாசை வரை கணபதி ஹோமத்துடன், ப்ரத்யங்கிரா தேவி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா உக்ர ப்ரத்யங்கிராதேவி ஹோமம் மற்றும் மேல் கண்ட ஆறு ஹோமங்கள்
60 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தில் 6000 தட்டு மிளகாய் வற்றல், 300 லிட்டர் வேப்ப எண்ணெய், மிளகு, உப்பு, 108 வகையான மூலிகைகள், காய்கறி வகைகள், பழ வகைகள், இனிப்பு, கார வகைகள், பூசணிக்காய், பட்டு வஸ்திரங்கள், பலவகையான புஷ்பங்கள் 27 நட்சத்திர தாவரங்கள், நெய், தேன் என இன்னும் எண்ணற்ற சிகப்பு நிறத்தில் உள்ள திரவியங்களையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

நெருப்பிலே ஒரு மிளகாய் விழுந்து விட்டாலே வீட்டில் இருக்க முடியாமல் நாம் படும்பாடு நாமே அறிவோம். ஆனால் 6000 தட்டு மிளகாயை நெருப்பில் தேவிக்கு அர்ப்பணம் செய்யும் பொழுது எவரிடமும் தும்மல், இருமல் இல்லாதிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இந்த ப்ரத்தயிங்கிரா ஹோமத்தை செய்பவர்களுக்கும் காண்பவர்களுக்கும் பில்லி, சூனியம், பீடை, அபம்ருத்யு தோஷம்,நோய், கடன் தொல்லை நீங்கும். வளமான வாழ்வு கிட்டும். இந்த ஹோமத்தின் மூலம், 64 வகையான சாபங்கள் நிவர்த்தியாகின்றன. பல்வேறு கிரஹங்களால் வரக்கூடிய தடைகளும் நீங்கிவிடும். இந்த ஹோமம் நடத்துவோருக்கு ராகு,கேது தோஷம், அகால மரணம், கண்டம் நிவர்த்தி தோஷம் போன்றவை நீங்கி விடும். இது போன்ற எண்ணற்ற இன்னல்கள் நீங்கி வாழ்வில் பளம்பெற வழி கிடைக்கும்.

எனவே பக்தர்கள் அனைவரும் இந்த ஹோமத்திலும் சிறப்பு அன்னதானத்திலும் பங்குபெற்று பயன்பெற வேண்டும் என்று சுவாமிஜி அழைப்பு விடுத்துள்ளார். தொடர்புக்கு 94433 30203.

English summary
Karthika Amavasaya 4.12.2021 Saturday to 1.2.2022 Thai Amavasaya Maha Pradyangira Sulinidurga Homa to remove Rahu and Ketu Tosham for the benefit of the world is to be held at the Walaja Dhanwantari Peetha with the blessings of Dr. Sri Muralitharan Swamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X