Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு புதசுக்கிர யோகத்தால் உண்டாகும் அதிர்ஷ்டம்..சொத்து விஷயத்தில் நன்மை
மார்கழி மாத பலன்கள்: மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். அந்த மார்கழி மாதம் விரைவில் பிறக்கவுள்ளது. 2025 ஆம் வருடத்தின் இறுதி, 2026 ஆம் வருடத்தின் தொடக்கம் ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளும் மார்கழி மாதத்தில் நிகழ உள்ளது. மார்கழியை தெய்வங்களின் மாதம் என்பார்கள். அந்தளவுக்கு ஆன்மிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றது. இதில் கிரக நிலைகளில் பல்வேறு மாற்றங்கள், சில முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கும்ப ராசி பெறப்போகும் பலன்களை காணலாம்.
மார்கழி மாதம் 16.12.2025 தொடங்கி 14.1.2026 வரை இருக்கிறது. குரு பகவான் மிதுன ராசியில் வக்ர கதியில் உள்ளார். கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறார். புதன் - சுக்கிரன் விருச்சிக ராசியிலும், சூரியன் - செவ்வாய் தனுசு ராசியிலும் இருக்கிறார்கள். சனி - ராகு கும்ப ராசியில் உள்ளனர். 21.12.2025 ஆம் தேதி குரு பகவான் வக்ர நிலையில் புனர்பூசம் நான்காம் பாதத்தில் இருந்து, புனர்பூசம் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகவுள்ளார்.

மார்கழி மாத பலன்கள்
22.12.2025 சுக்கிரன் பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதேபோல 25.12.2025 அன்று புதன் பகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு பெயர்ச்சி ஆகவுள்ளனர். 11.1.2026 புதன் தனுசு ராசியில் இருந்து மகரத்துக்கும், செவ்வாய் பகவான் 14.1.2026 தேதி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகவுள்ளனர்.
நிகழ்வுகள்
19.12.2025 அன்று அனுமன் ஜெயந்தி, 20.12.2025 அமாவாசை நிகழ்வுகள் இருக்கின்றன. 30.12.2025 அன்றைய தினம் வைகுண்ட ஏகாதசி, 3.1.2026 ஆருத்ரா பெளர்ணமி, 14.1.2026 போகி பண்டிகை ஆகிய நிகழ்வுகள் உள்ளன. அதற்கு அடுத்த நாள் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். பொதுவாகவே மார்கழி மாதம் முழுவதுமே விசேஷம் தான். இந்த வருடம் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் கும்ப ராசி பெற போகும் பலன்களை காணலாம்.
கும்பம்
கும்ப ராசி மற்றும் லக்னத்தினருக்கு உபஜெய லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் இருப்பதால் காரிய வெற்றிகள் கிடைக்கும் மாதமாக இருக்கும். கை மேல் உங்களுக்கு பலன் கிடைக்கும். காரிய வெற்றிகள் உண்டாகும். திருமண யோகம் உண்டாகும். மிகப்பெரிய சந்தோஷங்கள் கிடைக்கும் காலகட்டம். ஜென்ம ராசியிலேயே ராகு பகவான் இருப்பதால் அமர்ந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.
வில்லங்கங்கள் தீரும்
பூமிகாரகன் செவ்வாய் பகவான் தனுசு ராசியில் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். அரசாங்க வகையில் காரியத்தை சாதிக்கக்கூடிய பக்குவங்கள் அதிகரிக்கும். சகோதர வகையில் சந்தோஷம் ஏற்படும். உறவுகளில் இருந்து வந்த தேவையில்லாத சங்கடங்கள், பிரச்சனைகள் எல்லாமே தீரும் காலகட்டம்.
நல்ல சூழல்
உறவுகளில் நன்மையான சூழல் அமையும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தோடு செல்லலாம் என்கிற திட்டங்கள் தீட்டக்கூடிய யோகம் ஏற்படும். ஏதாவது வேண்டுதல்கள் இருப்பின் குலதெய்வ கோயில்களில் அதனை செய்து முடிப்பீர்கள். தன்னுடைய வாழ்க்கை, தனது வாழ்க்கை என்பதை விட எதிர்காலத்துக்கான தேவை என்பதை மனதில் வைத்து ஒற்றுமையோடு திட்டம் தீட்டுவீர்கள்.
புகழ் உண்டாகும்
ஏதாவது முக்கியமான விஷயங்களைப் பேசும்போது கணவன், மனைவிக்குள் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும். அதனைத் தவிர்த்து எதிர்கால திட்டங்களை கணவன், மனைவி ஒற்றுமையோடு சேர்ந்து செய்யும் நல்ல காலமாக இருக்கும். மார்கழி மாதத்தின் ஆரம்பத்தில் துலாம் ராசியில் சந்திரன் இருப்பதால் நீதித் துறையில் இருப்பவர்களுக்கு நிலையான புகழ் கிடைக்கும்.
புதசுக்கிர யோகம்
ஜென்ம ராசிக்குப் பத்தாம் இடத்தில் புதன் சுக்கிரன் இணைந்து புதசுக்கிர யோகத்தோடு இருப்பதால் சொந்தமாக தொழில், வியாபாரம் ஆரம்பிக்கும் எண்ணங்கள் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். அதன் மூலம் நல்ல வருமானமும், லாபங்களும் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த தொல்லைகள் குறையும்.
வழிபாடு
7 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் பழைய இரு, நான்கு சக்கர வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு அவமானங்களை மீறிய வெகுமானங்கள் கிடைக்கும் காலகட்டம். குலதெய்வ வழிபாடுகளைச் செய்வது உங்களுக்கு ஏற்றத்தை உண்டாக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
2026 குருப்பெயர்ச்சி: பொற்காலம் ஆரம்பம்! தனுசு ராசிக்கு குரு பகவானின் அருள் மழை -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
2026 குருப்பெயர்ச்சி: நினைத்தது நடக்கும்! விருச்சிக ராசிக்கு குருப்பெயர்ச்சி தரும் பெரிய அதிர்ஷ்டம்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
2026 குருப்பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு குருப்பெயர்ச்சியில் பெரிய மாற்றம்! 2026ல் அதிர்ஷ்டம் வருமா? -
2026 குருப்பெயர்ச்சி: துலாம் ராசிக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் தரும் குருப்பெயர்ச்சி -
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications