Meenam Rasi Palan: மீன ராசிக்கு வீண் செலவு, அலைச்சல், பழிச்சொல்.. ரொம்ப ரொம்ப கவனம்
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம்
புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொலு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
இந்த புரட்டாசி மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே இந்த மாதம் முழுவதும் சூரியன் உங்களை நேருக்கு நேராக பார்த்து அமர்ந்திருக்கிறார். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். சுக்கிரன் பலமாக இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே ஈகோ ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சொத்து வாங்கும்போது கவனம்
அக்டோபர் 9 ஆம் தேதி முதல் சுக்கிரன் சாதகமாக வருகிறார். அதன் பிறகு, குடும்பத்தில் நிம்மதி வர ஆரம்பிக்கும். செவ்வாய் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் சிறு சிறு விபத்துகள், பணம் கொடுத்து ஏமாறும் வாய்ப்புள்ளது. இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீடு, மனை சொத்துக்கள் வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரியாகப் பார்த்துக் கொண்டு வாங்குவது நல்லது.
செலவு, அலைச்சல், பழிச்சொல்
சகோதரர்களால் வீண் செலவுகள், அலைச்சல்கள், சிறிய சிறிய பழிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் ராசியில் கேது அமர்ந்திருப்பதால் வெற்றிகள் கிடைக்கும். 6 ஆம் இடத்தில் கேது இருப்பதால் அனைத்து விதமான செளபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருப்பது நல்லது.
தூக்கம் குறையும்
பிள்ளைகளால் சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். புதன் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் தாய் வழி உறவினர்கள் உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிகரமாக இருப்பார்கள். ராகு 12 ஆம் இடத்தில் இருப்பதால் தூக்கம் குறைவதற்கான வாய்ப்புள்ளது. பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
வழிபாடு
பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பழிச்சொல் வரும் என்பதால் கவனம் தேவை. இந்த மாதம் முழுவதும் நல்லவை எல்லாம் நடக்க ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்குவது நன்மை பயக்கும். தூய்மைப் பணியாளர்களுக்கு உதவுவது மேன்மையை ஏற்படுத்தும். வாழைப் பழம் தானமாக கொடுப்பது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications