This week rasi palan: மீன ராசிக்கு அஷ்டமத்தில் 3 கிரகம்.. பண விஷயத்தில் வரும் ஆபத்து.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் யாரிடமும் சண்டை போடாமல் இருப்பது நல்லது. அஷ்டமத்தில் சூரியன் செவ்வாய் புதன் இருப்பதால் முதுகுத் தண்டுவடம், முதுகு எழும்பு, நரம்புகள் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. சனி வக்கிரத்தில் இருப்பதால் அழுத்தம் ஏற்படும். குரு திரிகோணத்தில் இருப்பதால் பெரிய பாதிப்புகள் கொடுக்காமல் தப்பிக்க வைக்கும்.
பொறுமை அவசியம்
மிகுந்த பொறுமையாக இருப்பது நல்லது. அஷ்டமத்தில் ஒரு மாதம் கடினமாக இருக்கும். ஆனால், அதனை சமாளிக்கக் கூடிய சக்தியும் உங்களுக்கு இருக்கும். நிறைய பேருக்கு அறுவை சிகிச்சைகள் நடக்கும். பணத்தை மற்றவர்களிடம் கொடுத்து சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அவசியமில்லாத விஷயங்களை சிந்திப்பதை தவிர்ப்பதை நல்லது.
பிரச்சனைகள் நீங்கும்
இழுபறியாகவும், பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய வாரமாக இருக்கும். தொழில் ரீதியாக கவனமாக இருப்பது நல்லது. மேலதிகாரிகளின் தர்க்கம், வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.
சொத்து சேர்க்கை
துணைக்கும், உங்களுக்கும் இருந்த மனத் தாங்கல்கள் நீங்கும். சுப காரியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். தாய் வழி, தந்தை வழி உறவில் இருந்த மனத் தாங்கல்கள், வாக்குவாதங்கள் அனைத்தும் தீரும்.
உடற்பயிற்சி
இந்த வாரத்திலோ, வரும் ஐப்பசி மாதத்திலோ நீண்ட நாட்களாக ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும். அதற்கான சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை எடுத்து குணமடைவீர்கள். உடற்பயிற்சியை தினந்தோறும் செய்வது நல்ல பலனைத் தரும். கையெழுத்திடுவதற்கு முன்பு படித்துப் பார்த்துவிட்டு போடுவது நல்லது.
வழிபாடு
அரசுத் துறை, அரசியல்வாதிகள், தனியார் துறையில் மேலதிகாரிகள் விஷயத்தில் தர்க்கம் இல்லாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். நிறைய சந்தோஷம் கிடைக்கும். நிறைய ஏற்றங்களும் ஏற்படும். பைரவர் வழிபாடு நல்ல முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications