Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Meenam Rasi Palan: புதன், சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணம் கொட்டப் போகுது

Subscribe to Oneindia Tamil

சுக்கிர பெயர்ச்சி: சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளார். சுக்கிரன் 14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் மீன ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.

மீனம்

மீன ராசி, லக்கினக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம், பஞ்சம ஸ்தானத்தில் அமர்கிறார். சுக்கிரன் உங்களுக்கு 3க்கு உரியவர். தைரிய வீரியத்துக்கு உரியவர். 8க்கு உரியவர். வலி, வேதனை, துக்கத்தைக் கொடுக்கக் கூடியவரும் அவரே. திரிகோணத்தில் சுக்கிர பகவான் அமர்ந்திருப்பது மிக சிறப்பு. சுக்கிர பகவானால் பெரிய கெடுதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை.

meenam-rasi-palan-what-kind-of-benefits-will-get-meenam-pisces-rasi-people-during-this-sukkiran-p

குழந்தை பாக்கியம்

சுக்கிரனும், புதனும் நண்பர்கள் என்பதால் 5 ஆம் இடத்தில் அமரும்போது, குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் நற்பலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். குழந்தைகளுக்கும், உங்களுக்குமான கருத்து வேறுபாடுகள் தீரும். 5 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிர பகவான் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தைப் பார்க்கிறது. உங்கள் முயற்சிகளால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி அடைவதற்கான காலகட்டமாக இருக்கும்.

பதவி உயர்வு

8 ஆம் அதிபதி 5 இல் அமர்வதால் குழந்தைகள் உங்களை விட்டுப் பிரிந்து விடுதியில் தங்கிப் படிக்கும் அமைப்பு உள்ளது. 8க்கு உரியவர் 5 ஆம் இடத்தில் இருப்பதால் பதவி உயர்வு கிடைக்கும். சில மாதங்களாக பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அதிகார வாய்ப்புகள் கிடைக்கும். அதிகார வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்படும்.

திடீர் அதிர்ஷ்டம்

சனி பகவான் உங்கள் ராசியில் அமர்ந்துள்ளதால் வேலையை மட்டும் விடாமல் இருப்பது நல்லது. சனி, செவ்வாய் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்பதால் கோவம் வருவதற்கான வாய்ப்புள்ளது. எந்த விஷயத்தை செய்தாலும் ஒருமுறைக்கு, இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சுக்கிரனால் உங்களுக்கு நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். கலைத் துறையில் இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

தொழில்

கலைத் துறையில் சேருவதற்கான ஆர்வம் அதிகரிக்கும். இசை, அழகு, டெக்ஸ்டைல் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். குருவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் வேலை, தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். பட்டம், பதவி, புகழ் கிடைக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.

மாற்றம்

ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரையில் சனியின் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். மன அழுத்தம் வந்தாலும் கோபப்படாமல் வேலையை விட்டு விடாமல் இருப்பது நல்லது. சுக்கிரன், புதனோடு சேர்ந்திருப்பதால் புத்திசாலினத்தால் உயர்வடையும் காலகட்டமாக இருக்கும். அறிவு, புத்தியை வைத்து செய்யும் தொழிலில் அற்புதமான மாற்றத்தைக் காண்பீர்கள்.

திருமணம்

செப்டம்பர் 4 முதல் 14 ஆம் தேதி வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிக்கும்போது சுகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற்றும் காலகட்டமாக இருக்கும். அரசாங்க கடன், வங்கிக் கடன் கிடைக்கும். வீட்டை வாங்குவது, வீட்டை புனரமைப்பது, இடத்தை வாங்குவது போன்றவை நடக்கும். வாகனத்தை வாங்கக்கூடிய எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தி ஆகும். திருமணம் சார்ந்த விஷயங்களில் நல்லவை நடக்கும். புதிய வீடு, வண்டி, வாகனம் என மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

வழிபாடு

ஆவணி மாதம் 31 ஆம் தேதி சுக்கிர பகவான் ஜெயந்தி தினத்தன்று நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெண்பட்டு வஸ்திரத்தை சாற்றி 6 நெய்விளக்கு தீபமேற்றி வழிபடுவது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+