மீன ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. அதிர்ஷ்டம் இருக்கு.. ஆனால் ஆபத்தும் சேர்ந்து வருது
சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி வக்கிரம்
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

காயத்ரி மந்திரம்
சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.
இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மீனம் ராசி பலன்
பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது மீனம் ராசி. ராசியின் அதிபதி குரு பகவான். உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் சனி பகவான் வக்கிரகதியில் போவதால் தேவையற்ற செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலை மாற்றங்கள் ஏற்படும். இடம் விட்டு இடம்பெயரக் கூடிய வாய்ப்பு ஏற்படும். விசா கிடைப்பதில் தடை, வெளிநாடு செல்வதில் சிறு சிறு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
வேலையில் மாற்றம்
கணவன், மனைவிக்கும் அந்நியோன்யம் குறையக்கூடிய வாய்ப்புள்ளது. ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான முதல் ஒன்றரை மாத காலத்தில் அதீத அலைச்சல்கள் ஏற்படும். வேலையில் மாற்றம் உண்டாகும். தாயின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். ஆகஸ்ட் செப்டம்பர் காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்து போகும். இளைய சகோதரர்களால் பின்னடைவு ஏற்படும். போட்டிகள் ஏற்படும்.
பண வரவில் பிரச்சனை
அக்டோபர், நவம்பர் காலகட்டங்களில் பண வரவில் பிரச்சனைகள் ஏற்படும். பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை, கணவன், மனைக்குள் பிரச்சனைதகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ராசிக்கு 2 ம் இடத்தை சனி பார்ப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பேச்சு வார்த்தையில் வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது.
கவனம், கவனம்
யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் புதிய கடன்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் வம்புகளில் நீங்களாகவே சிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். உடல்நலனில் பின்னடைவுகள் ஏற்படும். சர்க்கரை, எலும்பு, ரத்தம் தொடர்பான, கழிவுப் பாதை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
தொழில்
பேக்கிங், காப்பீடு, கடல் வாணிபம், தங்க வியாபாரம் செய்பவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய வீடுகள் வாங்கும் போது ஆவணங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லது. தாயின் உடல்நலனில் பின்னடைவு ஏற்படும். முயற்சிகளில் சிறு சிறு தடங்கள் ஏற்படும். சகோதரர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும். புதிய வேலைவாய்ப்புகளில் பிரச்சனைகள் வரும். பண வரவில் தடங்கல்கள் இருக்கும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
வழிபாடு, பரிகாரம்
புதுக்கோட்டை அருகே உள்ள எட்டியத்தலி எனும் பகுதியில் உள்ள சனீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வது உங்களை பாதிப்புகளில் இருந்து காக்கும். சதுர்த்தி தினத்தன்று விநாயகர் கோயிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து வழிபடுவது அனைத்து விதமான ஏற்றத்தையும் கொடுக்கும். பூசாரி, குருக்களுக்கு வஸ்திர தானம் அளிப்பது நன்மை பயக்கும்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications