Meenam Rasi Palan: மீன ராசிக்கு அடிச்சது லாட்டரி.. ஜென்மசனி இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

meenam-weekly-rasi-palan-what-kind-of-benefits-meenam-pisces-people-will-get-from-august-18-to-24

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு

அந்த வகையில், ஆகஸ்ட் 19 முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் நற்பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடன்களை அடைக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் நல்ல ஏற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் குழப்பங்கள் அனைத்தும் தீரும்.

தொழில்

உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு போன்ற அனைத்து விஷயங்களிலும் அபிவிருத்திகள் ஏற்படும். வழக்குகளில் வெற்றிகள் ஏற்படும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

ஆரோக்கியம்

ரத்தத்தில் பரவும் நோய் பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, லிவர் தொடர்பான நோய்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். எல்லா விதத்திலும் அனுகூலம் ஏற்படும்.

வழிபாடு

வியாழக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி மனதார குலதெய்வத்தை வழிபட்டு வருவது வெற்றி மேல் வெற்றியைத் தரும். தனிப்பட்ட முறையில் எல்லாவிதமான ஏற்றங்களையும் பெறுவீர்கள். ஆவணி மாதத்தில் உங்களுக்கு நன்மைகளும், சிறப்புகளும், மகிழ்ச்சியும் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கக் கூடிய மாதமாக இருக்கும்.

பண வரவு

பொருளாதாரத்தில் நல்ல மேன்மை உண்டாகும். பண வரவுக்கு பிரச்சனைகள் இருக்காது. ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குலதெய்வ வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+