Rasi Palan This Week: மீன ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. முயற்சி முக்கியம் பாஸ்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளான ஆடி 18 ஆம் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி 19 முதல் 25 ஆம் தேதி வரையிலான ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஆகஸ்ட் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் பொறுமையாகச் செல்வது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியம், பழக்க வழக்கம், வண்டி வாகனங்கள் விஷயங்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அடிவயிற்றில் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளது. கால், பாதம், நகங்களில் சிறிது சிறிதாக வரும் பாதிப்புகள் கூட பெரிதாகும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
வெற்றி வரும்
பொருளாதார விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மன அழுத்தம் தொடர்பான பாதிப்புகள் நீங்கும். மருத்துவரை சென்று அணுகும் சூழல் வரும். புதிய கடன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடுகளை எப்படி கடனில்லாமல் செய்யலாம் என்று யோசிப்பது நல்லது. ரிஸ்க் எடுத்தாலும் வெற்றி வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
உடற்பயிற்சி
ஜென்மசனி என்று குழம்பிக் கொள்ளாமல் காலை வேளையில் தினந்தோறும் ஆயில் புல்லிங் மற்றும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும். சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் ஜென்ம சனியை நினைத்து வருத்தப்படாமல், முயற்சிகளை மேற்கொள்வது அற்புமான மாற்றத்தையும், ஏற்றத்தையும் தரும்.
வழிபாடு
ராசிநாதனான குரு 10 ஆம் இடத்தை பார்ப்பதால் தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை படிப்பது வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
புதன்கிழமை தோறும் இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு செய்வது மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொ டுக்கும்.












Click it and Unblock the Notifications