Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் வரும் அற்புதமான மாற்றம்.. இதில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களே பிறர் குடும்ப விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, உங்களுடைய குடும்ப விஷயத்திலும் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நன்மையை ஏற்படுத்தும். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரம், பணம், புதிய தொழில் தொடர்பான கவலைகள் எல்லாமே தீரும் காலகட்டமாக இருக்கும்.
தொழில்
எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் நீங்கும். தொழிலில் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பாதிப்புகள், சிக்கல்கள் எல்லாம் நீங்கும். மனதில் இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து தெளிவு பெறுவீர்கள்.
குடும்பம், காதல்
குடும்பத்தில் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளியில் நடக்கும் விஷயங்களுக்காக குடும்பத்தில் கடும் சொற்களைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது காதல் அமைப்பில் இருப்பவர்கள் இணக்கமாகச் செல்வது நல்லது. உங்கள் துணையுடன் நேரம் செலவழித்து பொறுமையாக, அன்பாகப் பேசுவது நல்லது. இல்லையெனில் தேவையில்லாமல் பிரச்சனைகள், சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
பயணத்தால் அனுகூலம்
கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்தப் பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். கடல் கடந்த பயணத்திற்கான திட்டமிடுதல் மூலமாக நீண்ட நாள் சந்திக்காத நண்பர்களை சந்திக்கும் யோகம் உண்டாகும். கழுத்து, முதுகு, கை கால் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வழிபாடு
சுப காரியத்தில் சிறு சிறு தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேம்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். துர்க்கை வழிபாடு சந்தோஷத்தையும், மன அமைதியையும் ஏற்படுத்தும். அபிராமி அந்தாதியை படித்து வந்தால் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்படும்.
அற்புதமான வாரமாக இருக்கும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்











Click it and Unblock the Notifications