Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத கிரக நிலை

எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

mesham-rasi-palan-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-during-the-month-of-aavani

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். சுப காரியங்கள் அதிக அளவில் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. 7 ஆம் இடத்தில் குரு பார்ப்பதால் அதிக அளவிலான நன்மைகள் ஏற்படும். குடும்பத்திற்குத் தேவையான பொருள் சேர்ப்பது, வண்டி வாகனம் மாற்றுவது, உங்கள் துணைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து கொடுப்பீர்கள். நிறைய அனுகூலங்கள் ஏற்படும்.

லாபம் அதிகரிக்கும்

சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களின் சந்திப்பு, மகான்கள் தரிசனம் ஏற்படும். லாபம் அபரிமிதமானதாக இருக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். மனதிற்குப் பிடித்த விஷயங்கள் கைகூடும். வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.

நல்ல செய்திகள்

எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகம், படிப்பில் ஏற்றம் உண்டாகும். மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படும். பண வரவுக்கு உண்டான அனுகூலம் காணப்படும். கடல் கடந்த பயணங்கள் ஏற்படும். முதலீடுகளை சரியாக செய்வீர்கள். தொழில் துறையில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும்.

தொழில் தொடங்கும் யோகம்

கூட்டுத் தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்குவீர்கள். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேருவதற்கான பிராப்தம் உண்டாகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து தொலைதூரத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினருடன் ஒன்று சேருவீர்கள். அசையும், அசையா பொருள்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வங்கிகள் கடனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தால் கிடைக்கும். அரசுத் துறை, அரசியலில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பெரிய கெளரவங்கள் ஏற்படும்.

ஆரோக்கியம்

வயிறு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உணவுப் பழக்கவழக்கங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. பிள்ளைகளுடன் கோப தாபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுக்கு ஏதாவதொரு மன அழுத்தம் இருக்கும். உங்கள் மேல் குற்றம் சொல்லும் வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

வழிபாடு

பார்வதி தேவி வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். அபிராமியில் 40, 59, 75 ஆவது பாடல்களை படிப்பது, கேட்பது நல்ல பலன்களைத் தரும். மேஷ ராசியினர் அனைத்து ஆவணி மாதங்களிலும் அபிராமி அந்தாதியைப் படிப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+