Sukkira Peyarchi: ஆரம்பிக்கலாங்களா.. மேஷ ராசிக்கு அற்புதங்களை அள்ளி தரும் சுக்கிரன்
Sukkira Peyarchi: சுக்கிர பெயர்ச்சி சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் 14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் மேஷ ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்கு சுக்கிர பகவான் இரண்டாம் இடத்திற்கு உரியவர். தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம், திருமணம், கூட்டாளிகள் அமைப்புக்கும் இவர் தான் அதிபதி. தற்போது அவர் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் அமரப் போகிறார். நான்காம் இடத்தை சுக ஸ்தானம் என்று கூறலாம். இது அற்புதமான அமைப்பாகும். அங்கு சுக்கிர பகவான் பலமடைகிறார். இந்த காலத்தில் உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்.
உத்யோகம், தொழில்
நல்ல வேலை தேடுவோருக்கு சிறப்பான உத்யோகம் கிடைக்கும். ஏற்கனவே உத்யோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் இருப்போருக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கான சூழல் உருவாகும். தொழிலில் ஏற்றம் காணப்படும். உங்களின் வாக்கு ஸ்தானம் பலமடையும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து, செல்வாக்கு கூடும்.
குடும்பம், சுப காரியம்
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, மகிழ்ச்சி பிறக்கும். பிரிந்தவர்கள் ஒன்றிணைவார்கள். சுப காரிய தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். இறங்கிய அனைத்து காரியங்களிலும். எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் படிப்படியாக நடைபெறும்.
சொந்த வீடு
புத்தி கூர்மையடையும். எண்ணத்தில் தெளிவு பிறக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். அவர்களால் ஆதாயமடைவார்கள். அம்மா வழி உறவில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து பாசம் அதிகரிக்கும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சொந்த வீடு சார்ந்த கனவுகள் கைக்கூடும். நிலம், வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். புதிய இருசக்கர வாகனம், கார் வாங்கி மகிழ்வீர்கள்.
பொருளாதாரம்
கலை, ஊடகம், தகவல் தொடர்பு, அகௌன்ட்ஸ், ஆட்டோமொபைல் உற்பத்தி, அது சார்ந்த உதிரி பாகங்கள் தயாரிப்பு, மெக்கானிக் ஆகியோருக்கு முன்னேற்றம் காணப்படும். சமூகத்தில் உயர் மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தெளிவான திட்டமிடல்களால் பொருளாதாரத்தில் உயர்வு உண்டு.
பரிகாரம்
மாமா, வாழ்க்கை துணையின் அப்பா மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் அவசியம். எதிரிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சற்று கவனம் வேண்டும். பணப்பரிமாற்றத்தில் அதிக எச்சரிக்கை வேண்டும். நவ கிரக வழிபாடும், சுக்கிரனுக்கு வெண் பட்டு ஆடை உடுத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் தடைகள் தூள் தூளாகி மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
-
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு ஜூன் 7க்குள் வரப்போகும் குட்நியூஸ்.. அதிர்ஷ்டம் காத்திருக்குது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications