Rasi Palan This Week: மிதுன ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும்.. இந்த வாரத்தில் நடக்கும் மாற்றம்
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். திங்கள்கிழமை தோறும் தெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அனுகூலம் காணப்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சுபகாரியத் தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
சிக்கல்கள் நீங்கும்
துணையின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உறவுகள் மேன்மை அடையும். தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். வாகன அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். மிக முக்கியமான வாரமாக இந்த வாரமாக அமையும்.
காதல் கைகூடும்
புதன் வக்ர நிவர்த்தியடைவது மிதுன ராசிக்காரர்களுக்கு யோகத்தைக் கொடுக்கும். காதல் கைகூடும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். குழந்தைகளைப் பற்றி அதிகளவிலான சிந்தனைகள் தோன்றும். உறவுகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. மிகவும் நல் உறவுகளில் இருக்கும் உறவுகள் கூட நம்மை விட்டு போகும் நிலைமை ஏற்படும்.
அதிர்ஷ்டம்
புதன் அதிர்ஷ்டத்தையும், இடமாற்றத்தையும் கொடுப்பார்கள். சண்டை, சச்சரவு தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. கடன் வாங்கும் நிர்ப்பந்தம் ஏற்படும். வெளியூர் வேலை, அரசு வேலை, வேலையாட்கள் அமைவது போன்ற யோகம் ஏற்படும். அதிக வட்டிக்கு கடன் கிடைக்கும் நிலை ஏற்படும். காதல் திருமணம் கைகூடும். மாணவ மாணவிகள் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஒன்றுக்கு இரண்டு முறை எழுதிப் பார்த்துக் கொள்வது நல்லது. பெரிய ஏற்றத்தைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும், மனைவியாக இருந்தால் கணவரின் உடல்நிலையில் அதீத கவனமாக இருப்பது நல்லது. துர்க்கை வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். ரத்தத்தில் பரவும் நோய்கள், ரத்த உபத்திரவங்கள், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. லிவர், கிட்னி தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது. ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமர் பாதத்தை தினந்தோறும் வழிபாடு செய்வது உங்களுக்கு சகலவித நன்மைகளையும் கொடுக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications