புது கார், புது வீடு கலக்கப் போகும் மிதுன ராசி.. இனி கொட்டும் அதிர்ஷ்டம்.. உங்க ரூட்டு கிளியர்
ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத கிரக நிலை
எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் மிகுந்த வெற்றிகரமாக இருக்கும். நீங்கள் இறங்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். தொட்டது துலங்கும். உத்யோகம், தொழிலில் அற்புதமான பலன்கள் வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் உயரதிகாரிகளுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். மனதிற்கு பிடித்த படியான இடமாற்றம் நிகழும்.
புதிய பொறுப்புகள்
வரிதொடர்பாக நிலவி வந்த சிக்கல்களில் தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நற்பலன்கள் கிடைக்கும். உயரதிகாரிகளுடன் நம்பிக்கையை பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் தேடி வரும். உத்யோகம், தொழில் ஆகியவற்றில் மாற்றங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
கணவன் - மனைவி
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குழந்தைகளின் விஷயத்தில் ஏற்றம் காணப்படும். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் - மனைவி இடையே இருந்த வந்த மோதல் குறைந்து காதல் அதிகமாகும். காதல் உறவில் இருப்போருக்கு வெற்றியாக மாறி திருமணம் நடைபெறும்.
தெளிவு
கடந்த காலங்களில் உங்களை மிகவும் வேதனையடைய வைத்த மன வருத்தம் நீங்கும். மனது தெளிவடையும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புதிய உத்யோகம், தொழில் மாற்றம் செய்வதற்கு இது மிகவும் உகந்த காலம். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வீடு, நிலம், வண்டி, வாகனம், ஆபரணங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்து சேர்க்கை ஏற்படும்.
சுப காரியங்கள்
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரித்து, பொருளாதாரத்தில் உயர்வு காணப்படும். சற்று ஓய்வு கிடைக்கும். சுப காரிய தடைகள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கை துணையின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
கவனம்.. பரிகாரம்
ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இதயம், நரம்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் எச்சரிக்கை வேண்டும். பயணங்களின்போது மருந்து, மாத்திரைகளை பத்திரமாக எடுத்து செல்லவும். சிறு பிரச்சனை என்றாலும் அலட்சியப்படுத்த வேண்டாம். உங்கள் வீட்டு அருகில் உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவது பிரச்சனைகளை நிவர்த்தியாக்கி நிம்மதியை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications