மிதுன ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய மாதமான இந்த ஆடி மாதத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விஷேசமான மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

அந்த வகையில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுப காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் காலகட்டமாக இருக்கும். துணையின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.
வெற்றி மேல் வெற்றி
பெற்றோர், பெரியோரிடம் இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் சரியாகும். எந்தவொரு காரியத்தை எடுத்து செய்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஆடி மாதத்தில் சிறு சிறு தடைகள் இருந்து வந்தாலும், ஆவணி மாதத்தில் இருந்து அனைத்து தடைகளும் பரிபூரணமாக நீங்கி உங்களுக்கு சாதகமான காலகட்டமாக மாறும். யோக பலன்கள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.
குட் நியூஸ்
நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள், பாதிப்புகள், சவால்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உத்திரவாதத்துடன் எடுக்கக்கூடிய முடிவுகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதன் மூலம் பலரது பாராட்டையும் பெறுவீர்கள். இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறி அடுத்தடுத்து நடக்கும்.
புதிய வாகன யோகம்
புதிய வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். உறவினர் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். பெற்றோர், பெரியோரின் நீண்ட நாள் குறைகளை தீர்ப்பீர்கள். அவர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். செல்லப் பிராணிகளை வளர்த்துவீர்கள். வீட்டுக்குத் தேவையானவற்றை வாங்கி மகிழ்வீர்கள். வசதியான அமைப்புகளைச் செய்வீர்கள்.
கவனம்
மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். பிடித்த இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வீர்கள். தெய்வீக வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். புராதான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். சில்லென்ற பொருள்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியம்
அலர்ஜி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அலர்ஜி, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனிக்கிழமை தோறும் அம்பாள் வழிபாடு செய்வது அற்புதமான மாற்றத்தை தரும். சிவன், பார்வதி வழிபாடு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications